விருதுநகரில் உல்லாசமாக இருந்த பெண்ணிடமே ரூ.80 லட்சம்.. சமார்த்திய போலீஸ் ஏட்டுக்கு ட்விஸ்ட்
விருதுநகர்: விருதுநகரை சேர்ந்த பெண் ஒருவர் அழகு நிலையம் மற்றும் துணி தைக்கும் கடை நடத்தி வந்தார். கணவனை இழந்த அந்த பெண் தனியாக குழந்தையுடன் வசித்து வந்தார். அவருடன் பழகி வந்த போலீஸ் ஏட்டு சுந்தர்ராஜ், உல்லாசமாக இருந்தாராம். அதனை அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோவாக எடுத்து வைத்தாராம். பின்னர் திருமணம் செய்து கொள்வதாகவும், மகளை டாக்டருக்கு படிக்க வைப்பதாகவும் கூறி 80 லட்சம் வரை பறித்தாராம்.. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கணவணை இழந்த பெண்கள் அல்லது கணவனை பிரிந்த பெண்கள் சமுதாயத்தில் சரியான வாழ்க்கையை துணையை தேடும் போது, சிலரது வலையில் சிக்கி விடுகிறார்கள். சமுதாயத்தில் ஆறுதல் என்கிற போர்வையிலும், உதவி என்ற போர்வையிலும் வரும் ஆண்களே வலையில் வீழ்த்துகிறார்கள்.

முதலில் மிகவும் நம்பிக்கையாக நடந்து கொள்ளும் அவர்கள், ஜென்டில்மேன் போல் செயல்படுகிறார்கள். நன்கு பழகிய பின்னரே தங்கள் வேலையை காட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் நம்பிக்கைக்குரியவராக மாறும் ஆண்கள், அவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் அவர்களிடம் பணம், நகையை பறிக்கிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது.
போலீஸ் ஏட்டு பழக்கம்
விருதுநகரை சேர்ந்த பெண் ஒருவர் அழகு நிலையம் மற்றும் துணி தைக்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இந்த பெண்ணிடம் விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் 35 வயதாகும் சுந்தர்ராஜ் ( என்பவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுடன் சுந்தர்ராஜ் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதை ரகசியமாக வீடியோ எடுத்தாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
80 லட்சம் பணம்
மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும், அவரது மகளை மருத்துவம் படிக்க வைப்பதாகவும் கூறி ரூ.80 லட்சம் வரை பறித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த அந்த பெண், பணத்தை திரும்ப தருமாறு கேட்டாராம். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
நெருக்கமான வீடியோவை அனுப்புவேன்
மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அந்த வீடியோவை அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்புவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர், சுந்தர்ராஜுடனான தொடர்பை அப்பெண் துண்டித்து விட்டாராம். இந்நிலையில் அந்த போலீஸ் ஏட்டு, அந்த வீடியோவை வைத்து மிரட்டி தன்னுடன் மீண்டும் பழக வேண்டும் என தொல்லை கொடுத்தாராம்.
ஏட்டு சஸ்பெண்ட்
இதுகுறித்து அப்பெண் ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விவகாரம் விருதுநகர் மாவட்ட உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்ற நிலையில், விசாரணைக்கு பின்னர் ஏட்டு சுந்தர்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
போலீஸ் ஏட்டு கைது
இந்த நிலையில் பணம் பறிப்பு மற்றும் வீடியோ விவகாரம் குறித்து அந்த பெண் மீண்டும் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன் பேரில் விருதுநகர் மகளிர் போலீசார், சுந்தர்ராஜ் மீது கடந்த 3-ந்தேதி 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார்கள். தலைமறைவாக இருந்து வந்த ஏட்டு சுந்தர்ராஜை நேற்று சிவகங்கையில் உள்ள அவரது நண்பர் வீட்டில் வைத்து அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications