ரயில் படியில் அமர்வதில் தகராறு.. சண்டை முற்றி கீழே விழுந்த 2 பேர் பலி.. விருதுநகர் அருகே பயங்கரம்!
விருதுநகர்: நாகர்கோவில் - கோவை ரயிலில் சென்ற பயணிகள் இடையே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வதில் மோதல் ஏற்பட்டதில், இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவிலில் இருந்து கோவை சென்ற ரயில், விருந்துநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ரயிலில் இருந்து விழுந்து இருவர் உயிரிழந்தனர். படிக்கட்டில் பயணம் செய்வதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்த மோதலில் இருவரும் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் நாகர்கோவில் - கோவை ரயிலில் பயணம் செய்துள்ளார். அதே ரயிலில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஈரோடு செல்வதற்காக பயணம் செய்துள்ளார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.
ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி சண்டை போட்டுக்கொண்டதில், ரயிலின் படியில் இருந்து இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதைப் பார்த்து அதிர்ந்து போன சக பயணிகள் உடனே அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயிலில் இருந்து கீழே விழுந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தவறி விழுந்த மாரியப்பன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார்.
ரயில் சென்று கொண்டிருக்கும்போதே படிக்கட்டில் அமர்வது தொடர்பான சண்டையில் 2 பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி சரக ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications