விஏஓ டூ சர்வேயர்.. விருதுநகரில் சிக்கிய அரசு அதிகாரி.. சாத்தூர் தாசில்தார் மீது கலெக்டர் ஆக்ஷன்
விருதுநகர்: அரசு அலுவலகங்களில் குற்றங்களை செய்வதுடன், அந்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள், குற்றங்களை கண்டும் காணாமல் இருப்பவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், விருதுநகர் தாசில்தார் சிக்கியிருக்கிறார்கள்.
அரசு துறைகளிலிலேயே, வருவாய்த்துறை, பதிவுத்துறையில்தான் அதிகளவு பணம் புழங்கி வருகிறது. இதனாலேயே இந்த துறைகளில் அதிக லஞ்சம் பெருகி கொண்டிருக்கிறது.. அதிகாரிகள் சேவை விதிகளை மீறினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை தரப்பில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், சில அதிகாரிகள் அதை மதிப்பதில்லை.

முதலிடத்தை பிடித்த வருவாய்த்துறை
சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தில் கடந்த 10 வருடங்களில் லஞ்சம் வாங்கியதாக கையும், களவுமாக பிடிபட்டவர்கள் அதிகம் என்றும், அதுவும் பட்டா மாறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறை முதலிடத்தில் உள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.
அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கிய வழக்குகளில் 2023-24ல் அதிகபட்சமாக 155 வழக்குகளை போலீசார் விசாரித்து வருவதாகவும், 2023-24ல் லஞ்சம் வாங்கியதாக வருவாய்த்துறையினர் மீதுதான் அதிகபட்சமாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படியொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியும்கூட, பல்வேறு லஞ்ச புகார்கள் வந்துகொண்டிருககின்றன. இதுபோன்ற குறைபாடுகளை களைவதற்கான முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும், அதிகாரிகள் கைதாவது குறையவில்லை ..
சொந்த நிலத்துக்கு லஞ்சம் தரணுமா?
பட்டா மாறுதல் செய்யவும், சாதி சான்றிதழை வழங்கவும், நிலங்களை அளக்கவும் லஞ்சம் கேட்கிறார்கள். தங்களது சொந்தமாக வைத்திருக்கும் நிலத்துக்குகூட, இவர்களுக்கு லஞ்சம் தரவேண்டுமா? என்று நொந்துபோய், பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு போனை போட்டு புகார் தந்துவிடுகிறார்கள். இதனால், விஏஓ முதல் தாசில்தார்கள் வரை கைதாகிறார்கள்.
இந்நிலையில் விருதுநகர் தாசில்தார் ஒருவர் சிக்கியிருக்கிறார்.. விருதுநகர் - சாத்தூர் நான்குவழிச் சாலையின் அருகே உள்ளது இ.குமாரலிங்கபுரம். இங்கு 1,500 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ளது. இ.குமாரலிங்காபுரம் பாசன கண்மாயில் விவசாய நிலங்களுக்கு கரம்பை மண்ணை எடுத்து செல்வதற்காக, சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியை சேர்ந்த சிவரஞ்சனி என்பவர் வருவாய்த்துறையின் அனுமதியை பெற்றிருக்கிறார்.
அதிரடி உத்தரவு பிறப்பித்த கலெக்டர்
ஆனால் பாசனக் கண்மாயில் கரம்பை மண்ணுக்கு பதிலாக சரளை மண் அள்ளப்பட்டிருப்பதை கண்டு, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அரசு அனுமதியில்லாமல் சரளை மண் அள்ளப்பட்டிருப்பதை கண்டறிந்த கோட்டாட்சியர் சிவக்குமார், சரளை மண் எடுக்க பயன்படுத்திய 2 பொக்லைன் இயந்திரம், 4 லாரியை வச்சகாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்... அத்துடன, கனிம வளங்கள் திருடுவதை தடுக்க தவறிய சாத்தூர் தாசில்தார் ராமநாதனையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications