விசிகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு.. அடித்து சொல்லும் வன்னி அரசு.. திமுக திட்டம் என்ன?
விருதுநகர்: சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விசிக இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடுவதுதான் இலக்கு என்று அக்கட்சியின் நிர்வாகி வன்னி அரசு தெரிவித்துள்ளார். அதிக தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சியில் பங்கு குறித்து கேட்க முடியும் என்று கூறிய வன்னி அரசு, விஜய் மற்றும் சீமான் ஆகியோரிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக கூட்டணி இதுவரை தொகுதி தரப்பில் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை குழு கூட அமைக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி நேரில் சென்று முதல்வர் ஸ்டாலினிடம் ஒருமுறை வாழ்த்து பெற்றது. மற்ற கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அமைதி காத்து வருகின்றன.

சட்டசபைத் தேர்தல் நேரத்தில் தேவையின்றி சர்ச்சையில் சிக்க வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலரும் பொதுவெளியில் பேசுவதை தவிர்த்து வருகின்றனர். இருந்தாலும் விசிகவில் இருந்து தொடர்ச்சியாக திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் பெறுவதே இலக்கு என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விசிக நிர்வாகி வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மொழிபோர் தியாகிகள் குறித்து இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் பராசக்தி படம் உதவியாக உள்ளது. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற பாஜக மீண்டும் முயற்சியை தொடங்கி இருக்கிறது. பாஜகவுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.
விஜய், சீமான் உள்ளிட்டோர் பாஜகவை எதிர்க்க வேண்டும். ஆனால் பாஜகவை எதிர்க்க துணிவின்றி சமரசமாகி விடுகிறார்கள். அதனால் இளைஞர்கள் விஜய் மற்றும் சீமான் ஆகியோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த காலத்திலும் பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளோடு விசிகவுக்கு உறவு கிடையாது. தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்ற முதலில் குரல் எழுப்பியது விசிக தான்.
இந்த சட்டசபைத் தேர்தலில் விசிகவின் இலக்கு இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடுவது தான். அதிக இடங்களை வென்றால் மட்டுமே ஆட்சியில் பங்கு குறித்து பேச முடியும். மதவாத பாஜகவை வீழ்த்துவதுதான் விசிகவின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். விசிக ஏற்கனவே இந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் விசிக 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வெற்றிபெற்றது. கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் விசிக போட்டியிட்ட சூழலில், இம்முறை சொந்த சின்னத்தில் போட்டியிடக் கூடும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே மாநிலக் கட்சி அந்தஸ்தை விசிக பெற்றிருப்பதால், இம்முறை குறைந்தது 9 முதல் 10 தொகுதிகள் வரை போட்டியிடலாம் என்று பார்க்கப்படுகிறது.
-
விசிகவுக்கான 8 தொகுதிகள் முடிவாகிவிட்டது.. ஸ்டாலின் முறையாக அறிவிப்பார்.. திருமாவளவன் பேட்டி! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications