Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறைந்த மனிதன்(ம்).. நெஞ்சு வலியால் துடித்த சமையல் மாஸ்டர்.. நடுரோட்டில் இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தனியார் பஸ் மூலம் வேலைக்கு சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிந்த தனியார் ஓட்டல் ஊழியருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரை பஸ் ஊழியர்கள் நடுவழியில் இறக்கி விட்டுள்ளனர். இதனால் உதவிக்கு ஆளின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். மனிதநேயமற்ற இந்த சம்பவம் பலரையும் உலுக்கி உள்ளது.

மனித நேயம் மட்டும் இல்லாமல் போய் இருந்தால் எப்போதோ உலகம் அழிந்து போய் இருக்கும். நிகழ்காலத்தில் 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளமே அதற்கு சாட்சி. அன்று மனித நேயத்துடன் பலர் நடந்து கொண்டதால் இன்றைக்கு சென்னை மீண்டு வந்துள்ளது. அன்று பணம், பேர், புகழ் என எல்லாம் இருந்தவர்கள் பட்டினியில் தவித்தார்கள். பணத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதை எல்லாருக்குமே உணர்த்தியது சென்னை பெருவெள்ளம்.

Virudhunagar: Bus staff dropped chef who was suffering from chest pain in middle of the road

சகமனிதனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு காட்டி வாழ்வது தான் வாழ்க்கை என்பதை உணராமல் பலரும் மிருகமாய் வாழ்கிறார்கள். மனிதமும், மனித நேயமும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த சம்பவமே அதற்கு சாட்சி. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலத்தை சேர்ந்த 50 வயதாகும் ஜோதி பாஸ்கர், சங்கரன்கோவிலில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் காலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தனியார் பஸ் மூலம் வேலைக்கு சங்கரன்கோவிலுக்கு போய் கொண்டிருந்தார்.

நெஞ்சுவலி: பேருந்தில் ஏறியதில் இருந்தே சமையல் மாஸ்டர் ஜோதி பாஸ்கர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஜோதி பாஸ்கர் வலியால் கதறி துடித்தார். இதைப் பார்த்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து பஸ் டிரைவரிடம் தெரிவித்துள்ளார்கள்.

நடுரோட்டில் தவிப்பு: இதையடுத்து சங்கரன்கோவில் நகரை ஒட்டியிருந்த சாலையோர டீக்கடை முன்பு பஸ்சை நிறுத்தினர். பின்னர் நெஞ்சுவலியால் துடித்த ஜோதி பாஸ்கரை டிரைவரும், கண்டக்டரும் அங்கேயே இறக்கி விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

ஆள் இல்லாமல் மரணம்: இதற்கிடையே டீக்கடை முன்பே சிறிது நேரத்தில் அவர் சரிந்து விழுந்துவிட்டார். இதை பார்த்து டீக்கடைக்கு வந்தவர்கள் அவரை எழுப்ப முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் அவர் அசைவற்ற நிலையில் இருந்தார் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை ஏற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜோதி பாஸ்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்..

மனிதநேயமற்ற செயல்: இதுகுறித்து ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது, போலீசாரையே கலங்க வைத்த தகவல் வெளியானது. அப்போது தான் நெஞ்சு வலியால் துடித்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் நடுவழியில் பஸ்சில் இருந்து இறக்கி விட்டதும், உதவிக்கு ஆளின்றி சமையல் மாஸ்டர் இறந்து போனதும் தெரியவந்தது. இந்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+