வெம்பக்கோட்டையில் தோண்ட தோண்ட ஹேப்பி.. வாயை பிளக்க வைத்த விருதுநகர் விஜயகரிசல்குளம் வட்டசில்லுகள்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும்நிலையில், முக்கிய பொருள் ஒன்று கிடைத்துள்ளது.. இதைக்கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள், நேரில் சென்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம், வைப்பார் ஆற்றின் வடக்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது இரும்பு காலம் முதல் வரலாற்று தொடக்க காலத்தை சார்ந்த வாழ்விடப் பகுதி தொல்லியல் மேடு ஆகும்.. இந்த தொல்லியல் மேடு 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வாழ்விடப் பகுதியில் மொத்தம் 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

அகழாய்வில் இதுவரை பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்ணாடி, மணிகள், அறிய வகை கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆட்டக் காய்கள், பகடைக்காய், தக்களிகள், மணிகள், காதணிகள், சக்கரங்கள், எடைக் கற்கள், முத்திரைகள், திமிலுள்ள காளைகள், சுடுமண் உருவங்கள், சங்கு வளையல்கள், செப்புக் காசுகள், இரும்புப் பொருட்கள், தங்க அணிகலன், கற்கோடாரி, கண்ணாடி வளையல்கள், தந்தத்தினாலான பதக்கங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
சங்கு வளையல்கள்: இதற்கு பிறகு 2ம்கட்ட அகல ஆய்வு பணிகளின்போதும் சங்கு வளையல்கள் சுடுமண் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அப்போது, தங்கத்தினாலுன தோடு மற்றும் தங்க தகடு தலா 2 கிராம் அளவில் கண்டெடுக்கப்பட்டதை கேள்விப்பட்டதுமே, அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமான திரண்டு வந்து பார்வையிட்டு சென்றார்கள்.
இப்போது, வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.. 18க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை, சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில், சுடுமண்ணாலான கூம்பு, நீள்வட்ட, அல்லிமொட்டு வடிவுடன், வடிவமைத்தவர்களின் கைரேகையுடன் கூடிய அரிதான ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டது ஆச்சரியத்தை தந்திருந்தது.
3200 பொருட்கள்: மீண்டும் அக ஆய்வு பணிகள் அங்கு நடந்து கொண்டிருக்கின்றன.. அகழாய்வில் இதுவரை 3,200 பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொழுதுபோக்கிற்காக பெண்கள் பாண்டி விளையாட்டுக்கு பயன்படுத்திய வட்டச்சில்லுகள் ஏராளமாக கிடைத்திருக்கிறதாம்.. இதன் மூலம் நம்முடைய முன்னோர்கள், பொழுதுபோக்கிற்கும் எந்தஅளவுக்கு முக்கியத்துவம் தந்திருந்தார்கள் என்பது தெரிய வந்துள்ளது. வட்டச்சில்லுகளை வைத்து பெண்கள், பாண்டி விளையாடியிருக்கிறார்கள்.
ஆச்சரியம்: ஏற்கனவே, முதல் 2 கட்டங்களிலும் சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சில்லுவட்டுகள் மட்டுமே கிடைத்தன... பிறகு, பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கு சுடு மண்ணால் செய்யப்பட்ட ஆட்ட காய்கள், தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய்கள் கிடைத்தன. இப்போது, பெண்கள் விளையாடும் வட்டச்சில்லுகள் கிடைத்துள்ளதை கேள்விப்பட்டு, அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications