விருதுநகர் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு.. துப்பாக்கியுடன் ரத்தம் சொட்ட சொட்ட 4 பேரை தேடியதால் பரபரப்பு
விருதுநகர்: விருதுநகர் டிஎஸ்பி வெங்கடேசனை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியது. இதையடுத்து தனது துப்பாக்கியுடன் ரத்தம் சொட்ட சொட்ட 4 பேரை தேடிய நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுகவை காட்டிலும் திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

வெற்றி
இந்த தேர்தல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 14 ஒன்றியங்களில் அதிமுக 5 இடங்களிலும் திமுக 6 இடங்களிலும், சுயேச்சை இரு இடங்களிலும் அமமுக ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர்.

இரு தரப்பினருக்கு மோதல்
இந்த நிலையில் இங்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்று வந்தது. அப்போது அதிமுக, திமுகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் சுயேச்சைகளின் ஆதரவை பெற இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நரிக்குடி
அப்போது அங்கு வந்த விருதுநகர் டிஎஸ்பி வெங்கடேசனை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். அவர்களை பிடிக்க முயன்ற போலீஸார் மீது கற்களையும் வீசினர். மிகவும் பதற்றமான வாக்குச் சாவடியான நரிக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இருவர் கைது
இந்த நிலையிலும் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதால் அப்பகுதியில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மேலும் 4 பேரை பிடிக்க துப்பாக்கியுடன் கையில் ரத்தம் சொட்ட சொட்ட டிஎஸ்பி தேடுதல் வேட்டை நடத்தினார். இதில் இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மீதி இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதையடுத்து நரிக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications