உடம்பு மீது ஏறி உட்கார்ந்த, விருதுநகர் அரசு ஊழியர்.. தாலி கட்டின மனைவினு கூட யோசிக்கல.. கோர்ட் சபாஷ்
விருதுநகர்: விருதுநகரில் ஆவேசத்திலும், ஆத்திரத்திலும், கோபத்திலும் செய்த காரியம், வங்கி ஊழியரின் குடும்பத்தையே சிதறடித்துவிட்டது.. தாலி கட்டின மனைவி என்றும் பாராமல் கணவன் செய்த காரியத்துக்கு, இன்று நீதிமன்றம் சரியான தண்டனையை தந்துள்ளது.
கடந்த 2022-ல் இந்த சம்பவம் விருதுநகரில் நடந்தது.. என்ஜிஓ காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கண்ணன்.. இவருக்கு அப்போது 32 வயது.. என்ஜினியரிங் பட்டதாரியான கண்ணன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசுடைமை வங்கியில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கற்பகத்துக்கு 30 வயது. இவர் கண்ணனின் சொந்த அத்தை மகள் ஆவார். இந்த தம்பதிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது. நிகர்ஜித் (10), ஹரிஷ் கண்ணா (2) ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள்.

வீசியது சந்தேகப்புயல்
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்களின் வாழ்வில், திடீரென விரிசல் ஏற்பட துவங்கியது.. கண்ணனின் மனதில் சந்தேக புயல் வீச துவங்கியதுமே, நிலைகுலைந்து போனது அந்த குடும்பம். தினம் தினம் தகராறு வாக்குவாதங்கள் வெடித்து வந்தன.. சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்புகூட, தம்பதிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கற்பகம் தன்னுடைய 2 மகன்களுடன், சிவகாசி மணிநகரில் உள்ள தன்னுடைய அண்ணன் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கெஞ்சி கதறிய கணவன்
ஆனால் கண்ணன், உடனடியாக ஜெயக்குமார் வீட்டிற்கு சென்று, "இனிமேல் பிரச்சினை செய்ய மாட்டேன்" என்று கற்பகத்தின் காலிலும், ஜெயக்குமாரின் காலிலும் விழுந்து கெஞ்சியுள்ளார். இதையடுத்து ஜெயக்குமார், தன்னுடைய தங்கை கற்பகத்தை சமாதானம் செய்து, கண்ணனுடன் விருதுநகருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அடுத்த 2வது நாள் காலை 6.45 மணியளவில், 2 குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தபோது, கற்பகம் கிச்சனில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.. சமையலறைக்கு வந்த கண்ணன், அங்கிருந்த கத்தியை எடுத்து கற்பகத்தை குத்திவிட்டார். இதனால் வலியால் கற்பகம் அலறி துடித்துள்ளார்..
உடல் மீது ஏறி உட்கார்ந்த கணவர்
அந்த சத்தத்தை கேட்டு மூத்த மகன் நிகர்ஜித் கிச்சனுக்குள் ஓடியிருக்கிறார்.. அப்போது, கற்பகத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, அவரை கத்தியால் ஆவேசமாக குத்தியிருக்கிறார் கண்ணன். இதைப்பார்த்து மகன் அலறியிருக்கிறான்.. ஆனால் கண்ணனோ, மகன் நிகர்ஜித்தை வெளியே தள்ளி கதவைப்பூட்டி விட்டு சென்றுவிட்டாராம்.. இதற்கு பிறகு, நிகர்ஜித் உடனடியாக அக்கம்பக்கத்தினரிடம், செல்போனை வாங்கி தன்னுடைய மாமா ஜெயக்குமாருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்து கதறி அழுதுள்ளான்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார், உடனடியாக உறவினருடன் ஓடிவந்து பார்த்தபோது, கற்பகம் சடலமாகி கிடந்தார்.. இதுபற்றி ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி இந்த கொலை நடந்து, விருதுநகரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தீர்ப்பு தந்த நீதிமன்றம்
இந்த கொலை சம்பந்தமான வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தற்போது, கண்ணனுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்துள்ளார்.. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications