Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருதுநகர் தள்ளுவண்டி கடைக்காரரின் 2 பக்க கடிதம்.. ராஜபாளையம் மாற்றுத்திறனாளிக்கு என்னதான் நடந்தது?

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: ராஜபாளையம் மாற்றுத்திறனாளியின் தற்கொலையானது, அப்பகுதி மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. தற்கொலைக்கு முன்பு, எழுதப்பட்ட கடிதம், அதற்கு மேல் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது நக்கனேரி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் 40 வயது செல்வகுமார்.. இவரது மனைவி ஜெயலட்சுமி.. இந்த தம்பதிக்கு 2பிள்ளைகள் இருக்கிறார்கள்.

virudhunagar rajapalayam

சூப் விற்பனை: கடந்த சில வருடங்களுக்கு முன்பு தீ விபத்தில் சிக்கி கொண்டதால், செல்வக்குமாரின் 2 கைகளும் சரிவர செயல்படாமல் உள்ளது.. இதனால், த3 சக்கர தள்ளு வண்டியில் உதவிக்கு ஆள் வைத்து, சூப் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். ஜெயலட்சுமியும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போதும், குடும்ப செலவை சமாளிக்க முடியாமல், கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் செயலையும் செல்வக்குமார் மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது.

இந்த விஷயம் ஊர் பெரியவர்களுக்கு தெரிந்த நிலையில், தொடர்ந்து மது விற்பனை செய்தால் ஊரை விட்டு தள்ளி வைத்துவிடுவோம் என்று செல்வக்குமாரை எச்சரித்தனர். இதனால், அவர்களது வார்த்தைக்கு கட்டுப்பட்டு மது விற்பனையில் ஈடுபடாமல் இருந்து வந்தார் செல்வக்குமார்.

புதிய டூவீலர்: இந்நிலையில், கடந்த 22ம் தேதி புதிதாக வாங்கிய டூவீலரில் ஜெயலட்சுமி, செல்வக்குமாருடன் சென்று கொண்டிருந்தார்.. அப்போது தளவாய்புரம் பகுதியில் வாகன தணிக்கை போலீசார், செல்வகுமாரின் பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது, 5 முதல் 6 மது பாட்டில்கள் இருந்துள்ளன..

உடனே செல்வக்குமார் போலீசாரிடம், தன்னுடன் சூப் விற்க உதவும் ஊழியர்களுக்காக மது வாங்கி கொண்டு போவதாக சொல்லியுள்ளார்.. ஆனாலும் போலீசார் அதை நம்பாததால், செல்வக்குமார் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இறுதியில், புதிய டூ வீலர், மது பாட்டில், செல்போனையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அபராதம்: மறுநாள் போலீஸ் ஸ்டேஷன் சென்று செல்போனை வாங்கிய ஜெயலட்சுமி, புதிதாக வாங்கிய தன்னுடைய டூ வீலரை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.. ஆனால் போலீசாரோ, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அபராதம் கட்டிவிட்டு, கோர்ட்டில் வண்டியை பெற்றுக் கொள்ளுமாறு சொல்லிவிட்டார்களாம். இதையடுத்து, கோர்ட்டில் அபராதம் கட்டி, அந்த டூவீலரை மீட்டுள்ளார் செல்வகுமார்.

ஆனால், அப்போதிருந்து எப்போது செல்வக்குமாரை தெருவீதிகளில் பார்த்தாலும், மது விற்பனை செய்கிறாயா? என்று மிரட்டி கொண்டேயிருந்தார்களாம். அத்துடன், போலீஸ் ஸ்டேஷனில் இன்னும் அபராதம் கட்டவில்லையே? என்று குற்றம் சாட்டிக் கொண்டேயிருந்தார்களாம். இதனால் நாளுக்கு நாள் மனம் நொந்துபோன செல்வகுமார், போலீசார் தன்னை எந்நேரமும் டார்ச்சர் செய்வதாக குடும்பத்தினரிடம் சொல்லி வேதனைப்பட்டுள்ளார்.

பூச்சி மருந்து: இந்நிலையில், சம்பவத்தன்று, குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்ற நிலையில், ஜெயலட்சுமி வேலைக்கு சென்ற நிலையில், விவசாயத்துக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் செல்வகுமார். முன்னதாக, தன்னுடைய தற்கொலைக்கு காரணம் மாமுல் கேட்டு அத்துமீறும் போலீசார்தான் என்று 2 பக்கத்துக்கு கடிதமும் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால், உடலை மீட்க வந்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம் செய்தனர். இதையடுத்து, செல்வகுமாரின் தற்கொலைக்கு காரணம் போலீசார் தான் என்பது விசாரணையில் உறுதியானால், கடுமையான நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி தந்ததையடுத்து, செல்வக்குமார் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டது.

மாத இலக்கு: இதுகுறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் சொல்லும்போது, கைகளை இழந்த செல்வக்குமார், 60 சதவீத மாற்றுத்திறனாளியானார். மது விற்பனை செய்யாமல் இருந்ததால், தங்களுடைய மாத இலக்குக்காக, திருட்டு மது விற்பனை வழக்கின்பேரில் செல்வக்குமாரை அடிக்கடி போலீஸார் கைது செய்து வந்திருக்கிறார்கள்.. அத்துடன், சேத்தூர் ஊரக காவல் நிலைய தலைமை காவலரான செல்வின் என்பவர், மதுவிற்பனை செய்யச்சொல்லி செல்வக்குமாரை கட்டாயப்படுத்தி வந்தாராம்.

கடந்த 22ந்தேதி சொந்த பயன்பாட்டுக்காக மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் போகும்போதுதான், போலீசாரிடம் சிக்கியிருக்கிறார். அப்போது செல்வின், செல்வக்குமாரை தாக்கியதாகவும், இதை வீடியோ எடுக்க முயன்ற ஜெயலட்சுமியை தாக்கியதுடன், அத்துமீறி அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

விசாரணை: இதனால் தம்பதி இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்தநிலையில் செல்வக்குமார் தற்கொலை செய்துள்ளார். அந்த கடிதத்தில் காவலர் செல்வின் தான் காரணம் என்பதையும் எழுதி வைத்திருக்கிறாராம்.. இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் உரிய விசாரணையை தற்போது மேற்கொண்டு வருகிறார்கள்" என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+