விருதுநகரில் இப்படியொரு பெண்ணா? திருநெல்வேலியில் ஓட்டிய ஸ்கூட்டி.. தூத்துக்குடியில் "உருட்டியது" ஏன்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: பசி என்று வீட்டு வாசலில் வந்து நின்ற இளம்பெண்ணுக்கு சாப்பாடு தந்துள்ளார் குமார்.. ஆனால், சாப்பிட்ட வீட்டுக்கே துரோகம் செய்து, இந்த பெண் இன்று சிறையில் உள்ளார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இந்த பெண் யார்? என்ன செய்தார்?

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரை சேர்ந்தவர் குமார்... அந்த பகுதியிலேயே வாட்டர் சர்வீஸ் கடையை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்... இவர் சம்பவத்தன்று வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில், மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு கிளம்பி சென்றார்.. தன்னுடைய ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்தபோது, வாசலில் ஒரு இளம் நின்று கொண்டிருப்பதை பார்த்தார்..

virudhunagar nellai tirunelveli

மனம் இரங்கிய குமார்: குமாரை பார்த்ததுமே, "பசிக்குது, ஏதாவது சாப்பிட கொடுங்கள்" என்று கேட்டுள்ளார். இதனால் குமாரும் மனமிரங்கி, வீட்டுக்குள் சென்று, வெளியில் உள்ள பெண்ணுக்கு ஏதாவது சாப்பிட தருமாறு சொன்னார்.

அதன்படியே, வீட்டிலிருந்தவர்களும், அந்த பெண்ணுக்கு சாப்பாடு கொண்டு வந்து தந்தனர்.. அதை வாங்கிக்கொண்ட இளம்பெண், வீட்டின் வெளியே உட்கார்ந்து, சாப்பிட துவங்கினார்.. இந்த பெண் வாசலில் சாப்பிட்டு கொண்டிருந்தபோதே, குமார் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டிற்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்..

ஸ்கூட்டி சாவி: வெளியில் சாப்பிட்டு கொண்டிருந்த பெண், குமாரின் ஸ்கூட்டி பூட்டாமல், சாவியுடன் நிற்பதை பார்த்தார்.. அதாவது, இளம்பெண்ணை வாசலில் பார்த்து விசாரித்ததில், ஸ்கூட்டியை பூட்டாமல் மறந்து வீட்டிற்குள் சென்றுவிட்டார் குமார்.. உடனே அந்த பெண், அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள நாலாட்டின்புத்தூரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென பெட்ரோல் இல்லாமல் ஸ்கூட்டி நின்றுவிட்டது.. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், அந்த ஸ்கூட்டியை உருட்டிக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார்.. அப்போது அந்த பகுதியில் டியூட்டியில் இருந்த ரோந்து போலீசார், இளம்பெண் ரோட்டில் ஸ்கூட்டியை உருட்டி செல்வதை கண்டு, அவரிடம் வந்து விசாரித்தனர்.

நீதிமன்றம்: அப்போது, வாய்க்கு வந்ததையெல்லாம் அந்த பெண் உளறி கொட்டி உள்ளார்.. இதனால் போலீசார் சந்தேகப்பட்டு, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.. அப்போதுதர்ன, தச்சநல்லூரில் குமாரிடம் திருடி கொண்டுவந்த ஸ்கூட்டி என்பது தெரியவந்தது. இந்த பெண் விருதுநகர், ஸ்ரீநகரை சேர்ந்தவராம்.. பெயர் கஸ்தூரி.. டூவீலரை திருடிய குற்றத்துக்காக அவரை கைது செய்த போலீசார் கஸ்தூரியை ஜெயிலில் அடைத்தனர.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+