உயிரை பறித்த லேப்டாப்.. சார்ஜ் செய்ய முயன்ற பெண் மின்சாரம் தாக்கி பலி.. விருதுநகரில் என்ன நடந்தது?
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் லேப்டாப் சார்ஜ் செய்ய முயன்ற பெண் மின்சாரம் தாக்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம் கோவையை சேர்ந்த பெண் டாக்டர் சென்னையில் இதேபோன்று பலியான நிலையில் தற்போது விருதுநகரிலும் இன்னொரு பெண் பலியாகி உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமம் என்பது தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் செந்திமயில். இவர் இன்று தனது வீட்டில் லேப்டாப்பை சார்ஜ் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி தரையில் விழுந்தார்.
இதை பார்த்ததும் குடும்பத்தினர் ஓடிவந்து வந்து அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது ஏற்கனவே செந்திமயில் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதாவது மருததுவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.
தமிழகத்தில் லேப்டாப் சார்ஜ் செய்யும்போது உயிரிழப்புகள் தற்போது அடிக்கடி நிகழ தொடங்கி உள்ளன. முன்னதாக கடந்த மே மாதம் இறுதியில் சென்னையில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்தது. அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு பயிற்சிக்கு வந்த பெண் மருத்துவர் சரணிதா தனது லேப்டாப்பில் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இதனால் வீட்டில் லேப்டாப் சார்ஜ் செய்வோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். லேப்டாப் சார்ஜ் செய்வதில் எந்த சூழலிலும் அலட்சியம் காட்டக்கூடாது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications