வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகளவில் எகிறும் கொரோனா.. முழு லாக்டவுன்.. என்ன செய்யப் போகிறது இந்தியா?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனா காரணமாக 154,966,318 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் வைரஸ் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

Recommended Video

    கைமீறி போகும் கொரோனா பாதிப்பு.. மீண்டும் நாடு முழுவதும் லாக்டவுன் கொண்டுவர திட்டம்?

    உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பல நாடுகளை சுழன்று அடித்து வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதிகரிப்பதும், குறைவதுமாக வைரஸ் எண்ணிக்கை தொடர்ந்து வித்தை காட்டி வருகிறது.

    அதேபோல், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3,240,586 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் உயிரிழப்புகள் தொடருகின்றன. ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் தினசரி வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகம்.

    செங்கல்பட்டில் 'பகீர்'.. ஆக்சிஜன் தட்டுப்பாடு - 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி பலிசெங்கல்பட்டில் 'பகீர்'.. ஆக்சிஜன் தட்டுப்பாடு - 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி பலி

     அதிகரிக்கும் பாதிப்பு

    அதிகரிக்கும் பாதிப்பு

    உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 154,966,318 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 132,420,319 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 41,735 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட சற்று அதிகமாகும். அதுமட்டுமின்றி, அங்கு ஒரேநாளில் 842 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

     பிரேசிலில் அதிகம்

    பிரேசிலில் அதிகம்

    அதேபோல், பிரேசிலில் ஒரே நாளில் 69,378 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,025 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், இங்கிலாந்தில் 1,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்சில் 24,371 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு ஒரேநாளில் 247 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

     பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 337 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், இத்தாலியில் 9,116 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பதிவாகியுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 305 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

     தொடரும் பேச்சுவார்த்தை

    தொடரும் பேச்சுவார்த்தை

    இந்த சூழலில், கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், அதற்கு பதில் மாற்று நன்கொடையாளர்களை தேடி வருவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது,. அடுத்த சில மாதங்களுக்கு இந்தியாவால் கொரோனா தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சர்வதேச சுகாதார நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா மற்ற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் எப்போது வழங்கும் என்ற தேதி உறுதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒராண்டில் சர்வதேச அளவில் பெரியவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கு 3 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று சர்வதேச சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் தொடர்ந்து நிலவும் வைரஸ் பரவல் காரணமாக முழு லாக் டவுன் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்திருக்கிறது.

    English summary
    15.49 crore worldwide corona cases - உலகில் கொரோனா வைரஸ்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X