Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'பேரழிவு..' வெள்ளை மாளிகை நோக்கி சென்ற 'அந்த' 4ஆவது விமானம்.. 9/11 தாக்குதல்- அன்று நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் 9/11 தாக்குதல் என்றால் பெரும்பாலானோருக்கு இரட்டை கோபுர தாக்குதல் தான் நினைவுக்கு வரும். ஆனால், அன்றைய தினம் கடத்தப்பட்டது மொத்தம் நான்கு விமானங்கள். மற்ற இரண்டு விமானங்களை வைத்து பயங்கரவாதிகள் போட்ட திட்டம் அமெரிக்காவின் அடிநாதத்தையே அசைத்துப் பார்த்தது..!

Recommended Video

    America-வின் கருப்பு பக்கத்தை எழுத காரணமாக அமைந்த சின்ன கத்தி.. எப்படி நடந்தது?

    அமெரிக்காவில் 9/11 தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. சர்வதேச அளவில் மிகவும் மோசமான, அதிக விளைவுகளை ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதல் என்றால் அது இரட்டை கோபுர தாக்குதல் தான்.

    சுமார் 3000 பேர் பலியாகக் காரணமாக இருந்த அன்றைய தினம் நடந்தது என்ன? உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பிய இந்தத் தாக்குதல் எப்படி நிகழ்ந்தது?

     முதல் கடத்தல்

    முதல் கடத்தல்

    2001, செப்டம்பர் 11 - காலை 8 மணி வரை நியூயார்க் நகருக்கு அன்று வழக்கமான நாளாகவே இருந்தது. சொல்லப்போனால் வழக்கத்தைவிட அழகான ஒரு நாள். அன்று நியூயார்க் நகரை நீல வானம் சூழ்ந்திருந்தது. சுற்றி மேகங்கள் என எதுவும் இல்லை. அழகிய அந்த நாளை உற்சாகத்துடன் நியூயார்க்வாசிகள் தொடங்கினர். ஆனால், அதே நேரம் சரியாகக் காலை 7.59 மணிக்கு அமெரிக்கன் ஏர்லைன் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 767 விமானம் - American Airlines Flight 11 பாஸ்டன் லோகன் விமான நிலையத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு புறப்பட்டது.

     விமானப் பணிப்பெண்

    விமானப் பணிப்பெண்

    அந்த விமானம் காலை 8.15 மணியளவில் டிராபிக் கன்டிரோல் உடனான தொடர்பை இழந்தது. அப்போது டிராபிக் கன்டிரோலில் இருந்தவர்கள் தொழில்நுட்ப கோளாறு என்றே முதலில் நினைத்தனர். அப்போது அந்த விமானத்தில் இருந்த பணிப் பெண் பெட்டி ஓங் (Betty Ong) அமெரிக்கன் ஏர்லைன் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். பிஸ்னஸ் கிளாசில் இருந்த சிலர் தாக்கப்பட்டுள்ளதாகவும் விமானிகள் இருக்கும் காக்பிட்டுக்குள் சிலர் புகுந்துவிட்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டில் விமானம் ஒன்று கடத்தப்பட்டுள்ளது என்பது அப்போது தான் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. ஆனால், இது வெறும் தொடக்கம் தான் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

     உதவிய ஹட்ஸன் நதி

    உதவிய ஹட்ஸன் நதி

    விமானத்தில் சிறு கத்தியை எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள், தங்களிடம் அதி பயங்கர வெடிபொருட்கள் உள்ளதாகக் கூறி விமானத்தைக் கடத்தியுள்ளனர். விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததே பயங்கரவாதிகளின் முதல் வெற்றி. அடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கிச் சென்ற விமானத்தை நியூயார்க் நகருக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு பயங்கரவாதிகளுக்கு உதவியது ஹட்ஸன் நதி. 315 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நதி நியூயார்க் நகரில் தான் கடலில் கலக்கும். இதைத் தெரிந்து வைத்திருந்த பயங்கரவாதிகள் ஹட்ஸன் நதி சென்ற பாதையில் விமானத்தைச் செலுத்தத் தொடங்கினர்.

     முதல் விமானம்

    முதல் விமானம்

    World Trade center என்று அழைக்கப்பட்ட இரட்டை கோபுரத்தில் பணியாற்றியவர்கள் வழக்கம் போலவே தங்கள் பணிகளை தொடங்கியிருந்தனர். அப்போது சரியாகக் காலை 8.46 மணிக்கு வடக்கு டவரில் முதல் விமானம் மோதியது. 93 - 99 தளங்கள் இருந்த இடத்தில் விமானம் மோதியதால், பலத்த சத்தத்துடன் கரும் புகையும் எழும்பியது. அந்த டவர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அங்கிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. முதலில் அனைவரும் குண்டுவெடிப்பு அல்லது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து என்றே கருதினர்.

     அடுத்த தாக்குதல்

    அடுத்த தாக்குதல்

    அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் 9.03 மணிக்குக் கிழக்கு டவரில் யுனைடட் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 767 (United Airlines Flight 175) விமானம் இரண்டாவது விமானம் தெற்கு டவரில் மோதியது. இதற்குப் பின்னரே இது பயங்கரவாதிகள் தாக்குதல் என்பது உறுதியானது. விமானங்களிலிருந்த வெளியேறிய ஜெட் எரிபொருள் அதிவேகமாக நெருப்பைப் பரப்பியது. இரண்டு டவர்களில் இருந்தும் அதிகளவில் கரும் புகை கிளம்பியது. இது அங்கிருந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் கரும் புகை என்றால் தீ கட்டுக்குள் இல்லாமல் அதிவேகமாகப் பரவுகிறது என்று அர்த்தம்.

     தரைமட்டமான இரட்டை கோபுரம்

    தரைமட்டமான இரட்டை கோபுரம்

    இந்த நெருப்பு இரட்டை கோபுரத்தின் கட்டுமானத்தைப் பலவீனப்படுத்தியது. ஒரு மணி நேரத்திற்குள் 9.59 மணிக்கு சவுத் டவுர் தரைமட்டமானது. அடுத்த வடக்கு டவரும் எப்போது வேண்டுமானால் தரைமட்டமாகலாம் விமானம் மோதிய 93ஆவது தளத்திற்குக் கீழ் இருப்பவர்களுக்குக் கூட தப்பிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் 100ஆவது தளத்திற்கு மேல் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பே இல்லை. இதனால் அஞ்சிய அவர்கள் நார்த் டவரில் இருந்து குதிக்கத் தொடங்கினர்.

     கரும் புகையால் சூழ்ந்த நியூயார்க்

    கரும் புகையால் சூழ்ந்த நியூயார்க்

    அங்கிருந்தவர்கள் அஞ்சியபடியே 10.28 மணிக்கு நார்த் டவரும் தரைமட்டனமாது. நியூயார்க் நகரின் அடையாளமாக திழந்க இரட்டை கோபுரம் வெறும் சில நிமிட இடைவெளியில் தரைமட்டமானது. அப்போது எரியத் தொடங்கிய தீ முழுமையாக அணைக்கப்படவே பல நாட்கள் வரை ஆனது என்றால் நிலவரத்தின் தீவிர தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் பயணித்தவர்கள், இரட்டை கோபுரத்தில் இருந்தவர்கள் என மொத்தம் 2763 பேர் பலியாகினர். அழகிய நீள நிறத்திலிருந்த நியூயார்க் நகரின் வானம் கருப்பு புகையாலும், வெள்ளை நிற கட்டிட இடிபாடு தூசிகளாலும் சூழ்ந்தன.

     வெறும் தொடக்கம் தான்

    வெறும் தொடக்கம் தான்

    பெரும்பாலும் 9/11 தாக்குதல் என்றால் இந்த இரட்டை கோபுர தாக்குதல் மட்டுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் பயங்கரவாதிகளின் சதித் திட்ட இத்துடன் முடிந்து போகவில்லை. அவர்கள் கடத்தியிருந்தது மொத்தம் நான்கு விமானங்களை.! பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குச் சென்ற அந்த மூன்றாவது விமானம் அமெரிக்கன் ஏர்லைனுக்கு சொந்தமான போயிங் 757 (American Airlines Flight 77) விமானம். பயங்கரவாதிகளின் அடுத்த குறியாக இருந்தது உலகின் மிகவும் பவர் புல்லான அலுவலகமாகக் கருதப்படும் பென்டகன்..!

    பென்டகன்

    பென்டகன்

    சர்வதேச அளவில் பல போர்களை வெற்றிகரமாக நடத்திய பென்டகன், தன் மீது நடக்கவிருந்த தாக்குதலைத் தடுக்க தவறிவிட்டது. சரியாகக் காலை 9.30 மணியளவில் பென்டகன் அலுவலகத்தில் அந்த மூன்றாவது விமானம் மோதியது. இதில் விமானத்தில் பயணித்தவர்கள், பென்டகன் அலுவலகத்தில் இருந்தவர்கள் உட்பட மொத்தம் 189 பேர் உயிரிழந்தனர். சொல்லப்போனால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரிய சவால்விடும் வகையில் இருந்தது இந்த பென்டகன் தாக்குதல் தான்.

     வெள்ளை மாளிகை நோக்கி 4ஆவது விமானம்

    வெள்ளை மாளிகை நோக்கி 4ஆவது விமானம்

    இந்த மூன்றைக் காட்டிலும் நான்காவது விமானம் தான் முக்கிய இலக்கை கொண்டிருந்தது. இந்த விமானம் 8 மணிக்கு நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக 8.42 மணிக்கு இந்த புறப்பட்டது. சில நிமிடங்களிலேயே இந்த விமானத்தைப் பயங்கரவாதிகள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விமானம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை நோக்கிச் செல்ல தொடங்கியது. இதை ரேடாரில் பார்த்ததுமே பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். ஏனென்றால் அதிபர் மாளிகை இருப்பது வாஷிங்டனில் தான். பயங்கரவாதிகளின் குறி அமெரிக்க கேபிடல் என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற கட்டிடமா அல்லது அதிபர் மாளிகையா எனத் தெளிவாகத் தெரியவில்லை. இதையடுத்து 9.30 மணியளவில் கேபிடல், மற்றும் வெள்ளை மாளிகையில் இருந்த அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

     சுட்டு வீழ்த்திய அமெரிக்கா ராணுவம்?

    சுட்டு வீழ்த்திய அமெரிக்கா ராணுவம்?

    இந்த நேரத்தில் தான் அமெரிக்க அதிபர் புஷ் புதிய ராணுவத்தினருக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்திருந்தார். கடத்தப்பட்டிருக்கும் விமானங்களைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்த அதிபர் புஷ் அனுமதி அளித்திருந்தார். விமானத்தில் இருக்கும் அமெரிக்கர்கள் இதில் பலியாவார்கள் என்றாலும் கூட, உயிரிழப்புகளைக் குறைக்க இதுவே வழி என புஷ் கருதினார். அப்போது காலை 10:03 மணியளவில் பென்சில்வேனியா மாகாணத்தில் இருந்த சதுப்புநிலத்தில் இந்த விமானம் மோதியது, இதில் பயணித்த 44 பேரும் பலியாகினர். அமெரிக்கா பாதுகாப்புப் படையினரே இந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகப் பலரும் கருதினர். ஆனால் உண்மையில் அங்கு நடந்ததே வேறு!

    முறியடிப்பு

    முறியடிப்பு

    விமானம் புறப்பட்டதுமே உள்ளே இருந்த சிலருக்கு மற்ற இரட்டை கோபுர தாக்குதல் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. வெடிகுண்டு மிரட்டல் போலி என்பதும் விமானத்தை முக்கியமான ஏதாவது ஒரு இடத்தில் பயங்கரவாதிகள் மோதச் செய்வார்கள் என்பது அதிலிருந்த பயணிகளுக்குத் தெரிந்தது. இதனால் வெறும் சிறு கத்தியுடன் விமானத்தைக் கடத்திய பயங்கரவாதிகள் மீது அதிலிருந்த சில துணிச்சலான பயணிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். நிலைமை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து செல்வதை உணர்ந்த பயங்கரவாதிகள் பென்செல்வேனியாவில் மோத செய்தனர். அன்று விமானத்தில் பயணித்தவர்களின் துணிச்சலான செயல் மூலம் மிக மிக மோசமான ஒரு தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

     ஜார்ஜ் புஷ்

    ஜார்ஜ் புஷ்

    இந்த நான்கு சம்பவங்களில் மொத்தம் 2996 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். எந்தவொரு அமெரிக்கராலும் எப்போதும் மறக்க முடியாத, அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாளாகப் பதிந்த செப்டம்பர் 11ஆம் தேதி இவை தான் நடந்தது. இந்த தாக்குதலை நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு எதிராக ஜார்ஜ் புஷ் அரசு போர் தொடுத்தது, அதை 20 ஆண்டுகள் நீண்டது எல்லாம் தனிக்கதை..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+