2022-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரான்ஸ் எழுத்தாளருக்கு அறிவிப்பு!
வாஷிங்டன்: 2022-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளில் சர்வதேச அளவில் அளப்பறிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது.

நோபல் பரிசு
இந்த நிலையில், நடப்பு 2022-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளான திங்கட்கிழமை மருத்துவத்துறைக்கு அளிக்கப்பட்டது. இதில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மரபியல் நிபுணரான ஸ்வாண்டே பாபோவுக்கு மருத்துவத்துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. நவீன மனிதர்களின் அழிந்துபோன உறவினராக கருதப்படும் நியாண்டர்டாலின் மரபணுவை வெற்றிகரமாக வரிசைப்படுத்தியதற்காக ஸ்வான்டே பாபோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இயற்பியல்
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அலைன் ஆஸ்பெக்ட் (பிரான்ஸ்), ஜான் எப் கிளாசர் (அமெரிக்கா), ஆண்டன் ஜீலிங்கர் (ஆஸ்திரியா) ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது.

வேதியலுக்கான நோபல்
குவாண்டம் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் நுண் துகள்கள் பிரிக்கப்பட்டாலும் ஒன்றுக்கொன்று தொடர்பை வைத்துக்கொள்ளும் என்பதை நிரூபித்து காட்டியதற்காக இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நேற்று வேதியிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் கரோலின் பெர்டோசி, டென்மார்க்கின் மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவின் பேரி ஷார்ப்லெஸ் அகிய 3 பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு
இந்த நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இந்த விருது பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. L Occupation என்ற நூலை எழுதியதற்காக ஆனி எர்னாக்ஸூக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பாலின பாகுபாட்டிற்கு எதிரான கருத்துக்களை தைரியமாக பதிவு செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆழமான பார்வையை வழங்கும் வகையில்
தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து உண்மைகளை உடைத்து எழுதக்கூடிய எழுத்தாளராக ஆனி எர்னாக்ஸ் அறியப்பட்டு வருகிறார். 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஆனி எர்னாக்ஸ் எழுதியுள்ளார். இவற்றில் பல புத்தகங்கள் பிரான்சில் பள்ளி நூல்களாகவும் உள்ளன. சமூக வாழ்க்கை மற்றும் நவீன பிரான்ஸ் குறித்த ஆழமான பார்வையை வழங்கும் வகையில் இந்த புத்தகங்கள் உள்ளன.

பெரும் கவுரவமாக கருதுகிறேன்
தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது குறித்து செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஆனி எர்னாக்ஸ் கூறுகையில், ''எனக்கு கிடைத்த பெரும் கவுரவமாக இதை கருதுகிறேன். அதேவேளையில், மிகப்பெரிய பொறுப்பாகவும் பார்க்கிறேன்'' என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications