இங்கிலாந்தில் தொற்று வேகமாக குறைவு.. இந்தியாவில் ஒரே நாளில் 3,501 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனா பாதிப்பு 151,098,494 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து உலகளவில் முதலிடம் பிடித்து வருகிறது. இந்தியாவில் 3,86,829 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,501 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
அதிக தொற்று பாதிப்பில் 2-ம் இடத்தில் உள்ள பிரேசிலில் 69,079 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 3,074 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் கொரோனா தொடர்ந்து போட்டு தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 151,098,494 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 3,178,162 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 128,976,892 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் குறைகிறது
அமெரிக்காவில் கொரோனா முன்பை விட குறைந்து வருகிறது. அங்கு 58,782 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 849 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாகி வருகிறது. அங்கு ஒரே நாளில் 69,079 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,074 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

இந்தியா நம்பர் 1
இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து உச்சபட்சமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா தினசரி பாதிப்பில், உயிரிழப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சபட்ச அளவாக 386,829 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 3,501 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3,177,250 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இந்தியாவில் இதுவரை 18,754,925 பேர் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் 208,313 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. அங்கு 2,445 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் மேலும் 22 பேர் பலியாகியுள்ளனர்.

ஜெர்மனி நிலை என்ன?
பிரான்சில் 26,538 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 306 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 14,320 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவால் மேலும் 288 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 9,284 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு 364 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 22,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 203 பேர் உயிரிழந்துள்ளனர்.துருக்கியிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. அங்கு மேலும் 37,674 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 339 பேர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications