உடலில் ஒட்டுத்துணி இல்லை.. நிர்வாணமாக மாணவருடன் வீடியோ கால் பேசிய ஆசிரியை.. உல்லாசத்துக்கு அழைப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வரும் 30 வயது பெண், மைனர் மாணவனுடன் ‛ஸ்நாப்சாட்' மூலமாக நண்பராகி வீடியோகாலில் நிர்வாணமாக பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவருடன் உல்லாசம் அனுபவிக்கும் நோக்கில் தனியாக வரும்படியும் அழைத்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியையை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் கிரிஸ்டால் சிம்ஸ் (வயது 30). இவர் கேவ் சிட்டியை சேர்ந்தவர். பள்ளியில் பணியாற்றி வந்த ஒரு ஆசிரியர் விடுப்பில் சென்றதால் அவருக்கு பதிலாக கிறிஸ்டால் சிம்ஸ் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார். இவருக்கு சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.

இந்நிலையில் தான் அவர் பணிக்கு சேர்ந்த நிலையில் பல மாணவர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக ‛ப்ரண்ட் ரெக்வொஸ்ட்' கொடுத்தனர். அதேபோல் கிரிஸ்டால் சிம்ஸ் 18 வயது நிரம்பாத மைனரான மாணவர் ஒருவருக்கு ‛ஸ்நாப்சாட்' எனும் சமூக வலைதள செயலியில் இருந்து ‛ப்ரண்ட் ரெக்வொஸ்ட்' கொடுத்தார்.
ஆசிரியை என்பதால் அந்த மாணவரும் அதனை ஏற்றுக்கொண்டார். இருவரும் அந்த செயலி மூலமாக நண்பர்கள் ஆனார்கள். தொலைபேசி மற்றும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து இருவரும் அவ்வப்போது பேசி வந்தனர். கடந்த 22ம் தேதி இருவரும் இருவரும் செல்போனில் பேசினர். அப்போது கேவ் சிட்டியில் இருவரும் சந்திப்பது பற்றி விவாதித்தனர்.
அதன்பிறகு ஆசிரியை, மாணவருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது அவர் உடலில் ஆடையின்றி தோன்றியுள்ளார். ஷவரில் குளித்தபடி மாணவரிடம் பேசியுள்ளார். இதனால் மாணவர் அதிர்ச்சியில் உறைந்தார். ஆனால் ஆசிரியை கிரிஸ்டால் சிம்ஸ் கண்டுக்கொள்ளாமல் வெட்கமின்றி நிர்வாணமாக பேசியுள்ளார்.
இதுபற்றிய புகாரில் தற்போது ஆசிரியை கிரிஸ்டால் சிம்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் செல்போனில் பேசியதை மாணவர் பதிவு செய்துள்ளார். அதில் உள்ள வாய்ஸ் அடிப்படையில் போலீசார் ஆசிரியை கிரிஸ்டால் சிம்ஸை கடந்த 2ம் தேதி கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவரிடம் செல்போனில் பேசியதை அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், இருவரும் சந்திக்கவில்லை. பள்ளியை தவிர்த்து வேறு இடங்களில் ஒருபோதும் சந்தித்தது இல்லை என்று கூறினார்.
அதன்பிறகு ஆசிரியை கிரிஸ்டால் சிம்ஸை போலீசார் பரேன் கவுன்டி டிடென்ஷன் மையத்தில் வைத்தனர். பிறகு நீதிமன்ற உத்தரவின்படி 25 ஆயிரம் அமெரிக்க டாலரை பாண்ட்டாக செலுத்திய பிறகு கிரிஸ்டால் சிம்ஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது கிரிஸ்டால் சிம்ஸ் மீதான இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் கடும் சட்ட பிரச்சனையை எதிர்கொண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications