வீடுகள் குலுங்கின.. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் உள்ள பொருட்களும் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கா - மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள சான் டியோகா பகுதி முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுகத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

வீடுகளில் உள்ள பொருட்களும் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார்கள் நிலடுக்கத்தால் குலுங்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. எனினும் நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
நில நடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று அமெரிக்காவின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தீ அணைப்புத்துறையும் உறுதி செய்துள்ளது. சமீப காலமாக கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களில் மட்டும் 4 முதல் 5 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் அதிர்ந்த வீடியோக்களை எடுத்து பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அமெரிக்காவில் கடந்த வாரம் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது 4.4 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications