இந்திய வம்சாவளிக்கு அமெரிக்க ஓனர் கொடுத்த கிப்ட்.. 40 ஆண்டு பணியை பாராட்டி செய்த செயல் - நெகிழ்ச்சி
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் மெக்டொனால்ட் ரெஸ்டாரண்ட்டின் உரிமையாளர் ஒருவர் இந்திய வம்சாவளி ஊழியருக்கு இன்ப் அதிர்ச்சி கொடுத்தார். அவரது 40 ஆண்டு கால சேவையை பாராட்டி வழங்கிய ரூ.35.83 லட்சத்துக்கான காசோலையை பரிசாக வழங்கியது அனைவரின் கவனத்தையும் பெற்றது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் சவுகஸில் மெக்டொனால்ட் ரெஸ்டாரண்ட் உள்ளது. இங்கு பல்பீர் என்று அழைக்கப்படும் பர்கன் சிங் பணியாற்றி வருகிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக அந்த மெக்டொனால்ட் ரெஸ்டாரண்ட்டில் பணியாற்றி வருகிறார்.

முதலில் அவர் சாதாரணமாக பணியில் சேர்ந்தார். உதவியாளராகவும், கிளினி்ங் ஊழியராகவும் பணி செய்தார். அதன்பிறகு ஒவ்வொரு பணிகளையும் ஆர்வமாக கற்றுக்கொண்டார். தற்போது அவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் அவர் மேனேஜராக பதவி உயர்வு பெற்றார்.
பல்பீர் தற்போது பணியாற்றி வரும் ரெஸ்டாரண்ட்டை லிண்ட்சே வால் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் பல்பீர் மெக்டொனால்ட் நிறுவனத்தில் 40 ஆண்டு பணியை நிறைவு செய்துள்ளார். இதனால் அவரை அந்த ரெஸ்டாரண்ட்டின் உரிமையாளர் லிண்ட்சே வால் பாராட்டினார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கினார்.
அதுமட்டுமின்றி 40,000 அமெரிக்க டாலர்களை பரிசாக வழங்கினார். அதன் இந்திய மதிப்பு ரூ.35.83லட்சமாகும். இதை பல்பீர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தனக்கு கிடைத்த இந்த சர்ப்ரைஸை பார்த்து அவர் வியந்து போனார்.
இதுதொடர்பாக ரெஸ்டாரண்ட் உரிமையாளர் லிண்ட்சே வால் கூறுகையில், ‛‛எனது தந்தையிடம் பல்பீர் பணியாற்றினார். இப்போது என்னிடம் பணியாற்றி வருகிறோர். அவர் எங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார். அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். நான் இப்போது 4 மெக்டொனால்ட் ரெஸ்டாரண்ட்டை நடத்தி வருகிறேன். இதனால் அவர் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர். எங்களுக்கு தூணாக இருக்கிறார்'' என்றார்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications