மீன் சாப்பிட்டதால் தனது இரண்டு கைகள் மற்றும் கால்களை இழந்த பெண்.. அப்படி என்ன மீன்? எப்படி நடந்தது?
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு பெண், மீன் சாப்பிட்டதால் தனது இரண்டு கைகள் மற்றும் கால்களை இழந்துள்ளார். ஏன் இப்படி நடந்தது என்பது குறித்து மருத்துவர்கள் கூறிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பெண் ஒருவர் தனது இரண்டு கைகள் மற்றும் கால்களை இழந்துள்ளார். இதற்கு காரணம் அவர் சாப்பிட்ட மீனில் இருந்த பாக்டீரியா தொற்றுதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆபத்தான பாக்டீரியா எப்படி அவரது உடலுக்கு வந்தது என்று பார்த்தால், அவர் சாப்பிட்ட திலாப்பியா என்ற மீன் தான் காரணமாம். மாசுப்ட்ட நிலையில், வேகவைக்காத திலாப்பியா என்ற மீனை உட்கொண்டதால் பாக்டீரியா தொற்றுக்கு அந்த பெண் பாதிக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
40 வயதான லாரா பராஜாஸ் என்ற பெண், சான் ஜோஸ் என்ற நகரத்தில் வாழ்ந்து வருகிறார்.இவர் அங்குள்ள மீன் சந்தையில் போய் ஆசையாய் மீன் வாங்கி வந்து சாப்பிட்டிருக்கிறார். அதன்பிறகு பராஜாஸ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளார்கள்,.,
அங்கு லாரா பராஜாஸ் உடல் நிலை மோசமடைந்தது.கைகள் கருப்பாக மாறியது.கால்களும் கருப்பாக மாறியது. அத்துடன் அவர் கோமா நிலைக்கு போய்விட்டார். இத்துடன் உதடுகளும் கருப்பாக மாறியது. சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டது. செப்சிஸ் பாதிப்பும் லாராவுக் ஏற்பட்டது.
இந்த செப்சிஸ் பாதிப்பு எப்படி வரும் என்றால், ஒருவரின் சொந்த நோயெதிர்ப்பு மண்டலமே உடம்புக்கு எதிரியாக மாறும். அதனால் உடல் கடுமையாக பாதிக்கப்படும். அதாவது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுக்கு நமது நோய் எதிர்ப்பு மண்டலம் பதிலடி கொடுக்கும் போது இப்படியான ஒரு அபாயகரமான நிலை ஏற்படும்.
சுருக்கமாக சொல்வது என்றால் செப்சிஸ் என்பது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் காணப்படும் அதிகப்படியான எதிர்வினை என்று அழைக்கலாம். நமது உடம்பில் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி, பல உறுப்புகளின் திசுக்களைத் தாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கிவிடும் இதுதான் அமெரிக்க பெண் பராஜாஸ்க்கும் நடந்தது.
அமெரிக்க பெண் பராஜாஸ்க்கு ஏற்பட்ட நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில் விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற நோயால் அந்த பெண் பாதிக்கப்பட்டார். இது பொதுவாக மூல கடல் உணவு மற்றும் கடல் நீரில் காணப்படும் ஒரு கொடிய பாக்டீரியா காரணமாக ஏற்படும். எனவே இதுபோன்ற கடுமையான உடல்நல பாதிப்புகளை தவிர்க்க கடல் உணவை முறையாக வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்.
பச்சையாக அல்லது அசுத்தமான நிலையில் முறையாக சமைக்காமல் சாப்பிட்டால் பாக்டீரியாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தொற்று நோய் நிபுணர் டாக்டர் நடாஷா கூறினார்.
இதனிடையே கால்களையும் கைகளையும் இழந்த லாரா பராஜாஸ்க்கு அண்மையில் தான் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications