பாலியல் தொழிலாளி கொலை.. ‛எச்சில்’ மரபணு சோதனையில் 34 ஆண்டுக்கு பின் மாட்டிய கொலையாளி.. எப்படி?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் 1988ல் பெண் பாலியல் தொழிலாளியை கொலை செய்த நபரை 34 ஆண்டுகளுக்கு பிறகு மரபணு பரிசோதனை மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்கில் கொலையாளியின் எச்சில் முக்கிய தடயமாக மாறியுள்ளது.

இந்தியா உள்பட உலகின் பல்வேறு இடங்களில் போலீசாருக்கு சில வழக்குள் பெரும் தலைவலியை கொடுக்கும். கொலை குற்றவாளிகள் சிக்காத வழக்குகள் முடிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் இருக்கும். இத்தகைய வழக்குகளையும் பல சமயங்களில் சிறந்த புலனாய்வு மூலம் போலீசார் கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்து அசத்துவார்கள்.

அந்த வகையில் தான் தற்போது அமெரிக்காவில் 34 ஆண்டுகளுக்கு முன்பு பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது கொலையாளியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நீண்டகாலமாக துப்பு கிடைக்காமல் இருந்த நிலையில் இந்த வழக்குக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இது எப்படி நடந்தது? என்பது பற்றிய விபரம் வருமாறு:

அமெரிக்காவில் பெண் கொலை

அமெரிக்காவில் பெண் கொலை

அமெரிக்காவின் பென்சில்வேனியாில் வசித்து வந்தவர் அன்னா கேனி. இவர் தனது 26வது வயதில் கடந்த 1988 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி வனப்பகுதியில் இறந்து கிடந்தார். கயிற்றை வைத்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை.

கடிதம் எழுதிய நபர்

கடிதம் எழுதிய நபர்

இதுதொடர்பாக அங்குள்ள செய்தித்தாள் ஒன்றில் முதல் பக்கத்தில் விரிவான செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. மேலும் கொலை தொடர்பான தகவல்கள் கிடைத்தால் கூறும்படி அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கும் ஒரு ஆண்டாக எந்த பதிலும் வரவில்லை. மாறாக செய்தி வெளியான பிறகு 15 வது மாதம் கழித்து 1990ல் செய்தி நிறுவனத்துக்கு ஒரு கடிதம் வந்தது.

கொலையாளி என சந்தேகம்

கொலையாளி என சந்தேகம்

அதாவது, ‛‛இந்த கொலை மிகவும் கொடுமையானது. இதுபற்றிய முழுவிபரங்கள் என்பது கொலை செய்த நபருக்கு மட்டுமே தெரியும்'' என்பன போன்ற விஷயங்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த கடிதத்தை எழுதிய நபர் தான் கொலையாளி என செய்தி நிறுவனம் நம்பியது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடித்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை துவங்கினர்.

34 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

34 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

இந்நிலையில் தான் 34 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கொலையாளியை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி அன்னி கேனியை கொலை செய்த நபரின் பெயர் ஸ்காட் கிரீம் எனவும் அவர் ஹாம்பார்க் பகுதியில் வசித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த நபர் தான் அன்னி கேனியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். டிஎன்ஏ பரிசோதனையில் கிடைத்த முக்கிய சாட்சியங்கள் அடிப்படையில் இந்த கொலையாளியை கண்டுபிடித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கண்டுபிடித்தது எப்படி?

கண்டுபிடித்தது எப்படி?

டிஎன்ஏ பரிசோதனை தொடர்பாக போலீசார் கூறுகையில், ‛‛வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த அன்னி கேனி மற்றும் அந்த இடத்தில் கிடைத்த பொருட்கள் சேகரிக்கப்பட்டது. டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய கடிதத்தில் பசைக்கு பதில் கடிதத்தை ஒட்டி எச்சில் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இந்த எச்சில் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டது. இந்த 2 சோதனைகளில் கிடைத்த முடிவுகள் ஒத்து போயின. இதனால் கடிதம் எழுதிய நபர் தான் அன்னி கேனியை கொலை செய்ததை உறுதி செய்தோம்.

விரிவான ஆய்வில் உறுதி

விரிவான ஆய்வில் உறுதி

மேலும் கொலை செய்த நபர் முன்னாள் குற்றவாளியாக இருக்கலாம் என கருதி விசாரணை நடத்தி வந்தோம். இது பலன் அளிக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தினோம். இந்த ஆண்டு வர்ஜீனியாவில் உள்ள பாராபன் நானோ லேப் மூலம் மனிதர்களின் டிஎன்ஏ தொடர்பான விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இது தான் எங்களுக்கு உதவியது. இந்த ஆய்வின்போது ஸ்காம் கிரீம் தான் அந்த டிஎன்ஏவுக்கு சொந்தக்காரர் என்பதை அறிந்தோம்.

பாலியல் தொழிலாளி

பாலியல் தொழிலாளி

இருப்பினும் எங்களால் ஸ்காட் கிரீமை கைது செய்ய முடிவில்லை. .ஏனென்றால் அவர் தனது 58 வது வயதில் 2018 ல் இயற்கையாகவே இறந்துவிட்டார். மேலும் அன்னி கேனி இறந்தபோது அவர் ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்தார். வாடிக்கையாளரை சந்தித்த வேளையில் கொலை நடந்திருக்கலாம். இருப்பினும் கொலை நடந்ததற்கான காரணம் இன்னும் தெரிவில்லை. இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+