"இனி எல்லாத்துக்கும் பணம் கட்டணும்.." ட்விட்டரில் வரும் முக்கிய மாற்றம்? எலான் மஸ்க் பகீர்
வாஷிங்டன்: உலகின் டாப் சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் தளத்தில் இப்போது முக்கிய மாற்றம் வருகிறது. இதன் மூலம் நாம் கிட்டதட்ட அனைத்திற்கும் ட்விட்டரில் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாக வாய்ப்புள்ளது.
உலகில் அதிகப்படியான பயனாளர்களைக் கொண்ட சமூக வலைத்தளங்களில் ஒன்றாக ட்விட்டர் இருக்கிறது. தினசரி பல கோடி பேர் ட்விட்டர் தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். பல பிரபலங்களும் ட்விட்டர் தளத்தையே பயன்படுத்த விரும்புகின்றனர்.

இருப்பினும். ட்விட்டர் நிறுவனத்தில் லாபம் பெரியளவில் இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் உள்ளே வந்த எலான் மஸ்க் பெரிய தொகை கொடுத்து ட்விட்டர் தளத்தை வாங்குவதாக அறிவித்தார்.
எலான் மஸ்க்: ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலே பல மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் என்றாலே இலவசம் தான் என்று இருந்த நிலையில், அதை மாற்றிப் பல விஷயங்களுக்கும் கட்டணத்தை வசூலிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் இறங்கியுள்ளார். ஏற்கனவே, ப்ளூ டிக்கிற்கு அவர் கட்டணத்தை வசூலித்தார். இதற்கு உலகெங்கும் எதிர்ப்பு இருந்த போதும், அவர் பளூ டிக்கிற்கு கட்டணத்தை வசூலித்தார்.
இதனிடையே இப்போது அடுத்த ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க்.. அதாவது ட்விட்டர் தளத்தில் இனி நாம் நியூஸ் எதாவது படிக்க வேண்டும் என்றால் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற வசதியைக் கொண்டு வருகிறார். இது குறித்து எலான் மஸ்க், "அடுத்த மாதம் முதல் நியூஸ் நிறுவனங்கள் தங்கள் ஒவ்வொரு கட்டுரையைப் படிக்கவும் பயனாளர்களிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்கலாம். இதற்கான வசதி ஏற்படுத்தப்படுகிறது.
அடுத்த அறிவிப்பு: மாத சந்தா செலுத்த விரும்பாத பயனாளர்கள்.. அவ்வப்போது மட்டும் செய்திகளைப் படிக்கிறார்கள் என்றால் இதுபோல ஒவ்வொரு செய்திக்கும் சற்று அதிக கட்டணம் செலுத்திப் படிக்கலாம். இது மீடியா நிறுவனங்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பெரிய உதவியாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக யூடியூப், இன்ஸ்டாகிராம் போல ட்விட்டரில் பிரபலமாக உள்ளவர்களும் தங்கள் கண்டெட்டுகளை வைத்து பணத்தைச் சம்பாதிக்கலாம் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. இது உலகெங்கும் இருக்கும் கண்டென்ட் க்ரியெட்டர்களுக்கு பெரியளவில் உதவும். இதில் இருந்து ட்விட்டர் நிறுவனம் 10% மட்டும் கமிஷனாக எடுத்துக் கொள்ளும் என்றும் ட்விட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்கு இந்த நடவடிக்கை: கடந்த ஆண்டு அக்டோபரில் $44 பில்லியன் கொடுத்த எளான் மஸ்க் ட்விட்டரை வாங்கியிருந்தார். அப்போது விளம்பரங்கள் மூலம் மட்டுமே ட்விட்டர் நிறுவனத்திற்கு வருவாய் கிடைத்து வந்த நிலையில், அதன் பின்னர் பல்வேறு வழிகளில் வருவாயைப் பெருக்க எலான் மஸ்க் முடிவெடுத்தார். அதன் தொடர்ச்சியாகவே ஆட்குறைப்பு மற்றும் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகளை ட்விட்டர் எடுத்து வருகிறது.
முன்னதாக இதேபோல ட்விட்டர் தளத்தில் ப்ளூ டிக்கிற்கும் 8 டாலர் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பல பிரபலங்களும் பணம் செலுத்தாத நிலையில், அவர்களுக்கு ப்ளூ டிக் அகற்றப்பட்டது. இருந்த போதிலும், சில காரணங்களால் திடீரென அவர்களுக்கு மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
யாரு சாமி நீ.. 10479733000000 ரூபாய்.. எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு.. உலகின் முதல் Trillionaire! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications