கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவோம்.. அமேசான் 14,000 ஊழியர்கள் பணி நீக்கத்தில் என்ன நடந்தது? ஷாக்
வாஷிங்டன்: ‛‛3 மாத சம்பளத்துடன் உங்களை பணியில் இருந்து நீக்கிவிட்டோம்'' என்று அமேசான் நிறுவனம் 14,000 ஊழியர்களுக்கு இ-மெயில் மூலமாக வீட்டுக்கு அனுப்பி உள்ளது. மேலும் பணி நீக்கம் தொடர்பான இ-மெயில் செல்வதற்குள் பல ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்ததால் அவர்கள் செக்யூரிட்டிகள் மூலமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பணி நீக்க இ-மெயிலில் என்ன இருந்தது? என்பது பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், ஏஐ உள்பட பல்வேறு சேவைகளை அமேசான் வழங்கி வருகிறது.

தற்போது அங்கு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடைமுறையை தொடங்கி உள்ளது. ஏஐ பயன்பாடு மற்றும் ரோபோ பயன்பாடு உள்ளிட்டவற்றை அதிகரித்து ஊழியர்களை வெளியேற்றி வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் 14,000 ஊழியர்கள் ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஊழியர்களுக்கு இ-மெயில் மூலமாகவும், இ-மெயில் முகமவரி இல்லாதவர்கள் ‛ஹெல்ப் டெஸ்க்கில்' பணியாற்றுவோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணி நீக்கம் பற்றிய தகவலை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இ-மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு சில முக்கியமான விஷயம் உள்ளது.ஆனால் இது கடினமான செய்தியாக இருக்கிறது. எங்களின் நிறுவனம் முழுமையாக மதிப்பாய்வு செய்தது.
அதன்பிறகு அமேசான் முழுவதும் பணி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளோம். துரதிர்ஷ்டவசமாக நீங்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள். இந்த முடிவை நாங்கள் சாதாரணமாக எடுத்து விடவில்லை. கடினமாக தான் இந்த முடிவை எடுத்தோம். அடுத்த 90 நாட்கள் (3 மாதம்) முழு ஊதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர அனுமதி இல்லை. இதனால் அலுவலகத்தில் இருப்பவர்கள் செக்யூரிட்டிகள் மூலமாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது இந்த இ-மெயில் என்பது நேற்று முன்தினம் காலையில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த இ-மெயில் செல்வதற்குள் பலரும் அமேசான் நிறுவனத்துக்கு பணிக்கு வந்துவிட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் சிலர் பணிக்கு வந்து கொண்டிருந்தபோது வேலை நீக்க இ-மெயிலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications