இந்தியாவில் புது டீம்.. களமிறங்கிய அமேசான்! layoffக்கு பின்னால் இருக்கும் பக்கா பிளான்!
வாஷிங்டன்: அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களை அதிக அளவில் பணி நீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த பணி நீக்கத்திற்கு பின்னால், மிகப்பெரிய பிளான் இருப்பதாகவும், இந்த பிளானை இந்தியாவில் நடைமுறைப்படுத்த அமேசான் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்த பின்னர் ஏராளமான வேலைகள் காலியாகும் என்று சொல்லப்பட்டது. சொன்னபடியே வேலைகளும் காலியானது. இருப்பினும், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகின. இப்படி இருக்கையில், அமேசான் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வேலை நீக்கத்தை செய்து வருகிறது.

இந்திய பொறியியல் குழு
இது குறித்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில குடியரசுக் கட்சி வேட்பாளரான நிக்கோலஸ் லீ பிளம்ப், இந்தியாவை வைத்து அமேசான் மிகப்பெரிய பிளானை போடுவதாக கூறியிருக்கிறார். தான் அமேசான் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அவர் ஒரு முக்கியமான ஆதாரத்தை முன்வைத்துள்ளார், அதாவது அவருக்கு வந்ததாகக் கூறப்படும் ஒரு உள் நிறுவன தகவலின்படி, இந்தியாவில் புதிய பொறியியல் குழுவை அமேசான் உருவாக்கி வருவதாக தெரிவித்திருக்கிறார்.
பணி நீக்கத்திற்கான காரணம்
தயாரிப்பு மேம்பாட்டை விரைவுபடுத்தவும், டேட்டா என்ஜினியரிங் தேவைகளை குறைந்த செலவில் பூர்த்தி செய்யவும், இந்தியாவுக்குப் பணிகளை மாற்ற அமேசான் திட்டமிட்டிருப்பதாக ரகசிய தகவல்கள் தெரிவிக்கிறது என்று கூறியிருக்கிறார். மட்டுமல்லாது தன்னுடைய பணிநீக்கத்திற்குத் திறமையின்மையோ அல்லது செயற்கை நுண்ணறிவோ காரணம் அல்ல என்று பிளம்ப் கூறுகிறார். மேலும், இந்த பணிநீக்கத்திற்கு அவர் இரண்டு காரணங்களை முன்வைக்கிறார்.
1. உழைப்பு சுரண்டல்
2. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேற்கோள் காட்டுதல்
உழைப்பு சுரண்டல்
நிறுவனங்கள் பொருட்களைத் தயாரிப்பதில் போட்டி போடுவதை நிறுத்திவிட்டு, எல்லைகளைத் தாண்டி எங்கு மலிவாகத் தொழிலாளர்கள் கிடைக்கிறார்களோ அங்கு வேலைகளை மாற்றுகிறார்கள். அதாவது இந்தியாவில் நிறுவனத்தை வைத்தால், வேலை நேரம், குறைந்தபட்ச கூலி, தொழிலாளர் பாதுகாப்பு இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை. எனவே, அமேசான் இங்கு தனது உற்பத்தியை மாற்றுகிறது என்று பிளம்ப் கூறுகிறார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
பணிநீக்கங்களுக்கு AI தான் காரணம் என்பது ஒரு கதை மட்டுமே. உண்மையில் அனுபவம் வாய்ந்த அமெரிக்க ஊழியர்களுக்குப் பதிலாக, குறைந்த ஊதியத்தில் மற்ற நாட்டு ஊழியர்களை நியமிப்பதே இதன் நோக்கம் என்கிறார்.
அமெரிக்காவில், அமேசான் குடோனில் பொருட்களை இடம் மாற்றி வைக்கும் வேலையை செய்யும் ஊழியருக்கு, ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,500-2,400 வரை இந்நிறுவனம் சம்பளம் கொடுக்கிறது. ஆனால், இந்தியாவில் இந்த வேலைக்கு மாத சம்பளமே வெறும் ரூ.15,000 தான். இதைத்தான் பிளம்ப் குறிப்பிடுகிறார்.
இந்தியர்களுக்கு சப்போர்ட்
இப்படியாக இந்தியாவில் தனது உற்பத்தியை கட்டமைக்க, அமெரிக்க ஊழியர்கள் டார்கெட் வைத்து தூக்கப்படுகிறார்கள் என்று பிளம்ப் விமர்சித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்புதான், விசா (H-1B) சிக்கலால் இந்தியாவில் சிக்கியிருந்த ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அமேசான் அனுமதித்தது. இந்தச் சூழலில், தற்போது இந்தியாவில் புதிய குழுக்களை உருவாக்குவது அமெரிக்க ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மத்திய அரசு வேலை.. 243 பணியிடங்கள்.. 1.77 லட்சம் சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர்












Click it and Unblock the Notifications