பாலியல் உறவு.. 13 வயது சிறுவனையே தந்தையாக்கிய 31 வயது பெண்.. இப்போது சிக்கலில் தவிப்பு.. என்னாச்சு?
31 வயது நிரம்பிய பெண் 13 வயது சிறுவனுடன் நட்பாக பழகி பாலியல் உறவு வைத்து கொண்டு குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் 13 வயது சிறுவனுடன் நட்பாக பழகி கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்து கொண்ட 31 வயது பெண்ணுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பான பாலியல் புகாரில் ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்ட நிலையில் விரைவில் தண்டனை வழங்கப்படலாம் எனும் நிலையில் அதில் இருந்து தப்பிக்க அந்த பெண் மெகா பிளான் போட்டுள்ளார். இது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய கலாசாரம் கொண்ட நாடுகளில் அவ்வப்போது வித்தியாசமான பாலியல் புகார்கள் கூறப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தான் தற்போது அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் என்ன?, எப்போது நடந்தது? என்பது பற்றிய முழுவிபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சிறுவனுடன் பாலியல் உறவு
அமெரிக்காவின் கொலராடோவை சேர்ந்தவர் 31 வயது பெண் ஆன்ட்ரியா செரோனோ. இவர் 13 வயது சிறுவனுடன் நட்பாக பழகி உள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே வேறு விதமான உறவாக மாறியுள்ளது. அதாவது ஆன்ட்ரியோ செரோனோ, சிறுவனுடன் உறவு வைத்துள்ளார். சிறுவனிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவர் தொடர்ந்து உறவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கர்ப்பமான பெண்
மேலும் சிறுவனுக்கு தேவையானவற்றை ஆன்ட்ரியோ செரோனா செய்து கொடுத்துள்ளார். இதனால் சிறுவனும் சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதற்கிடையே தான் ஆன்ட்ரியோ செரோனா கர்ப்பமாகி உள்ளார். அப்போது தான் சிறுவனுக்கும், ஆன்ட்ரியோ செரோனாவுக்கும் இடையேயான உறவு பற்றிய விஷயம் வெளியே தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட பெண்
இதையடுத்து சிறுவன் தரப்பினர் கொடுத்த புகாரில் அமெரிக்காவின் புவுண்டைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்டரியா செரோனாவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதற்கிடையே ஆன்ட்ரியோ செரோனாவுக்கு குழந்தை ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தற்போது ஆன்டரியோ செரோனா குழந்தையுடன் உள்ளார்.

தண்டனையில் தப்பிக்க புதுரூட்
இந்நிலையில் தான் சிறை தண்டனையில் இருந்த தப்பிக்க ஆன்ட்ரியோ செரோனா திட்டமிட்டு வருகிறார். அதன்படி குழந்தையை காரணம் காட்டி தப்பிக்க அவர் முடிவு செய்துள்ளார். தற்போதைய குற்றச்சாட்டில் தண்டனை கிடைத்தால் 10 ஆண்டுகள் வரை அவர் சிறையில் இருக்க வேண்டி இருக்கும் என்பதால் அவரது வழக்கறிஞர்கள் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். இதற்காக புதிய மனு செய்துள்ளார். அதில் ஆன்ட்ரியோ செரோனா என்பவர் சிறுவனுடன் உறவு வைத்த குற்றவாளி என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் புதிய குழந்தையின் நலன் கருதி தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக சிறுவன் தரப்பிடம் பேச முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுவனின் தாய் எதிர்ப்பு
இதற்கு சிறுவனின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛எனது மகனை ஏமாற்றி கற்பை சூறையாடி உள்ளனர். இப்போது அவனுக்கு வயது 14 தான் ஆகிறது. இந்த வழக்கில் பெண் விடுவிக்கப்பட்டால் அந்த குழந்தைக்கு எனது மகன் தந்தை என்ற பிம்பம் உருவாக்கப்படும். இது வாழ்நாள் முழுவதும் அவனுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். பெண் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். ஒருவேளை இந்த வழக்கில் மைனர் பெண்ணை 31 வயது ஆண் பலாத்காரம் செய்திருந்தால் தண்டனை என்பது கடுமையாக இருந்திருக்கும். அதேபாணியில் இந்த பெண்ணுக்கும் தண்டனை வழங்க வேண்டும்'' என கூறியுள்ளார். இந்நிலையில் தான் அந்த பெண்ணின் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications