5 முதல் 11 வயது பிள்ளைகளுக்கு பைசர் தடுப்பூசிக்கு அனுமதி.. நவம்பர் மாதம் முதல் துவக்கம்
5 முதல் 11 வயது பிள்ளைகளுக்கு பைசர் தடுப்பூசிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது
வாஷிங்டன்: அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு பைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசின் மருத்துவ ஆலோசனை குழு அனுமதி வழங்கி உள்ளது.. இதையடுத்து, வரும் நவம்பர் மாதம் முதல் ஏறத்தாழ 28 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய சூழலில் தடுப்பூசி மட்டுமே அனைவருக்கும் ஒரே ஆறுதல் என்பதால், அனைத்து நாடுகளுமே தடுப்பூசிகளை செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், கனடா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் குழந்தைகளுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

விண்ணப்பம்
இந்நிலையில்தான், சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ துறைக்கு பைஸர் நிறுவனம் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தது.. அதில், இதுவரை 2,000க்கும் அதிகமான 5 - 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளோம்... குழந்தைகளுக்கு இதுவரை எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. அதனால் 5 - 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த அமெரிக்க அரசு எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஒப்புதல்
இதையடுத்து, குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் ஏற்றதா என்பது தொடர்பான விவாதமும் நடந்தது.. எனவே, 5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அடுத்த சில வாரங்களில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கான பணிகளும் வேகமாகின்றன.

பெரியவர்கள்
பெரியவர்களுக்கு போடப்படும் பைசர் தடுப்பு மருந்தில் குறைவான அளவு, பிள்ளைகளுக்கு பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் குழுவின் பரிந்துரையை அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.. இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு 3,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளில் ஆய்வு செய்யப்பட்டது.. இதில் பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்தில் 3-ல் ஒரு பங்கு மருந்து மட்டுமே குழந்தைகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டது... அதில், தீவிரமான பக்க விளைவுகள் எதுவும் ஆய்வில் கண்டறியப்படவில்லை...

ஒப்புதல்
இந்த நிலையில் பைசர் நிறுவன தடுப்பூசி 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நல்ல பலனை தருவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 3-ல் ஒரு பங்கு மருந்தை 2 டோஸ் போட்டதற்கே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவானது தெரிய வந்தது... ஆனால், 12 வயதுக்கு மேற்பட்டவர்களை போலவே வலிமையுடன் காணப்பட்டனர்... அதே வேளையில் மற்ற இளம் வயதினர் போலவே அவர்களுக்கும் காய்ச்சல், உடல் வலி போன்றவை ஏற்பட்டன என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் முதல் ஏறத்தாழ 28 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறையும்
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் இப்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இப்போது 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த அரசின் மருத்துவ ஆலோசனை குழு அனுமதி வழங்கி உள்ளது.. தொடர்ந்து தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, இந்த தடுப்பூசி செலுத்தை தீவிரப்படுத்துவதன் மூலம் மேலும் தொற்றை குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications