நெருங்கும் ஆபத்து? அதிபர் பதவியை தக்க வைப்பாரா ஜோ பைடன்? இன்று தொடங்கும் இம்பீச்மென்ட் விசாரணை
வாஷிங்டன்: மகன் ஹன்டர் பைடனுக்கு சாதகமாக செயல்பட்டு தொழிலில் லாபம் ஈட்டியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிரான இம்பீச்மென்ட் விசாரணை என்பது இன்று நடக்க உள்ளது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உள்ளார். அடுத்த ஆண்டு அங்கு மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ஜோ பைடன் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அதாவது ஜோ டைபனுக்கு அவரது மகன் ஹன்டர் பைடனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜோ பைடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மகன் ஹன்டர் பைடனுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜோ பைடனுக்கு எதிராக தற்போது இம்பீச்மென்ட் (Impeachment) விசாரணை நிலுவையில் உள்ளது. இம்பீச்மென்ட் விசாரணை என்பது ஆட்சி மற்றும் நீதித்துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டாலும் அவர்களை நேரடியாக நீக்க முடியாது என்பதால் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீக்குவதற்கான வழிமுறையாகும். இந்தியாவில் ஜனாதிபதி, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளை இந்த முறையில் தான் பதவி நீக்க முடியும்.
தற்போது ஜோ பைடனுக்கு எதிரான இம்பீச்மென்ட் விசாரணை தொடங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவரது மகன் ஹன்டர் பைடன் தான். அதாவது ஜோ பைடன் அமெரிக்க அதிபராவதற்கு முன்பு அந்நாட்டின் துணை அதிபராக செயல்பட்டார். அப்போது அவர் தனது மகன் ஹன்டர் பைடன் உக்ரைன் உள்பட சில நாடுகள் மூலம் தொழிலில் லாபம் அடையும் வகையில் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மொத்தம் ரூ.165 கோடி அளவுக்கு லாபமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அமெரிக்கா நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் நடவடிக்கையை தொடங்க முன்மொழிந்தார். இது ஏற்கப்பட்ட நிலையில் ஹவுசின் தலைவர் கெவின் மெக்கார்த்தி தலைமையில் விசாரணை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் ஜோ பைடன் மீதான இம்பீச்மென்ட் விசாரணை என்பது தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த விசாரணையில் ஜோ பைடன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஜோ பைடன் பதவி நீக்கம் செய்யப்படுவார். இந்த வேளையில் சட்ட விதிகளின் படி சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு விவாதங்கள் நடைபெற்று ஒருமித்த சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளின் அடிப்படையில்தான் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications