எப்புட்றா! எல்லாமே நல்ல விஷயம் தான்..நாங்க 'அப்பாக்கள்' ஆகப் போறோம்! குழந்தை பெறப் போகும் ஆண் தம்பதி
வாஷிங்டன் : கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அமெரிக்க வாழ் இந்திய தன்பாலின ஈர்ப்பு ஆண் தம்பதியினர் தற்போது தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஏதோ ஒரு தருணத்தில் ஒரு நிமிடம் காதல் எனும் உணர்வு ஒருவர் மீது மற்றொருவருக்கு கண்டிப்பாக காதல் வந்திருக்கும். காதலுக்கு பணம், மொழி, தேசம், பாலினம், வயது என எதுவுமே தெரியாது.
அது வந்து விட்டால் மட்டும் போதும் பிறகு எல்லாமே காதல் மயமாகிவிடும், அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் ஒரு காதல் வெகுவாக பாராட்டப்பட்டு வரும் அதே நேரத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தன்பாலின ஈர்ப்பு
நாகரிகம் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் தன் பாலின ஈர்ப்பாளர்களும் வெளிப்படையாக இந்த சமூகத்தில் வாழ தொடங்கி இருக்கின்றனர். பல நாடுகளில் அதற்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டு தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அமித்ஷா மற்றும் ஆதித்யா ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தனர்.

திருமணம்
அப்போது நீண்ட நாட்கள் நட்பாக பழகி வந்த தாங்கள் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளதால் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறிய நிலையில் பல சர்ச்சைகள் எழுந்தது. பல தடைகளுக்கு பின்னர் இருவரும் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டு தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமித் நடனகுழுவை நடத்திவரும் நிலையில் ஆதித்யா பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

வாழ்த்துகள்
2016 ஆம் ஆண்டு முதல் இருவரும் பழகிய நிலையில் தாங்கள் தன் பாலின ஈர்ப்பாளர்கள் என வெளிப்படையாக தெரிவித்ததோடு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. திருமணத்தின் போது தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியீட்ட நிலையில் அப்போதைக்கு அதுதான் சென்சேஷனல் டாபிக்காக இருந்தது தொடர்ந்து லட்சக்கணக்கானோர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

குழந்தை
இந்த நிலையில் தான் தற்போது மகிழ்ச்சி தரும் தகவல் ஒன்றை அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். தாங்கள் இருவரும் அப்பா ஆகப் போவதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இது தாங்கள் கண்ட கனவின் ஒரிஜினல் வெர்ஷன் எனவும் நீண்ட கால கனவு பூர்த்தியாக இருப்பதாக குழந்தையின் அல்ட்ரா ஸ்கேன் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார்கள் மேலும் மே மாதத்தில் தங்களின் குழந்தை இந்த உலகை காணும் எனக் கூறி இருக்கிறார்கள்.

இப்படித்தான்!
பொதுவாக ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. ஆனால் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருந்தோம். எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது என தேடிய போது வாடகை தாய் மற்றும் கருமுட்டை தானம் குறித்து தெரிய வந்தது. இதை அடுத்து தங்களுக்கு தெரிந்த ஒருவர் கருமுட்டை தானம் செய்ய முன் வந்ததால் வாடகை தாய் மூலம் தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதை அடுத்து அவர்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கும் நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications