வெறும் ஒரு பாய்ண்ட்.. மொத்தமாக மாறப்போகும் முடிவு.. வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் டுவிட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கடும் இழுபறி நீடித்து வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கையை உடனே நிறுத்துங்கள் என அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்து முடிந்தது. இதில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள ஜோ பிடன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
உலக நாடுகளை ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைகைய ஆளப் போகிறவர்கள் யார் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.

ஒரு பாய்ண்ட்
இந்த சூழலில், தேர்தல் முடிந்து 2 நாட்கள் கடந்த பின்னும் வாக்கு எண்ணிக்கையில் கடுமையான இழுபறியான நிலை நீடித்து வருகிறது. டிரம்ப் , பிடன் இடையே வாக்கு வித்தியாசம் என்பது பல மாநிலங்களில் ஒரு சதவீதம் இரண்டு சதவீதம் என்கிற வித்தியாசமே உள்ளது.

ஆறு மாகாணங்கள் பாக்கி
சமீபத்தில் வந்த தகவலி படி ஜோ பிடன் 264 எலக்ட்ரோல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 214 எலக்ட்ரோல் வாக்குகளையும் பெற்றிருந்தார்கள். ப்ளோரிடா, ஜார்ஜியா, வட கொரோலினா, பென்சில்வேனியா, மிக்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களே வெற்றியை தீர்மானிக்க போகின்றன.

3 மாகாணங்களில் முன்னிலை
20 எலக்ட்ரோல் வாக்குகள் உள்ள பென்சில்வேனியாவில் டிரம்ப் 2 பாய்ண்டுகளுடன் முன்னிலையில் உள்ளார். இதேபோல் 15 வாக்குகள் உள்ள வடக்கு கரோலினாவில் ஒரு பாய்ண்ட் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில உள்ளார். மேலும் 16 வாக்குகள் உள்ள ஜார்ஜியாவிலும் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

பீடன் முன்னிலை
அதேநேரம் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் தற்போது வெற்றி பெற வெறும் ஆறு வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த சூழலில் அவர் ஆறு வாக்குகள் உள்ள நிவேடா மாகாணத்தில் ஒரு பாய்ண்ட் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். மற்ற மாகாணங்களில் டிரம்பும் ஜோ பிடனுக்கும் வெறும் ஒரு பாய்ண்ட் வித்தியாசமே முன்னிலை நிலவரங்கள் உள்ளதால் கடும் போட்டி நிலவுகிறது, யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து திக்திக் நிலவரமாக உள்ளது.

கமலா அதிரடி பதிலடி
அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ள நிலையில்,. டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று பதிவிட்டு உள்ளார். அதேநேரம் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளருக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸோ, ஒவ்வொரு வாக்கையும் கட்டாயம் எண்ண வேண்டும் என்று ட்விட் போட்டுள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications