44 ஆண்டுகளாக அதிபர்.. உலகிலேயே அதிக வருடம் அதிகாரத்தில் இருந்த தலைவர்கள்.. லிஸ்டில் இவருமா?
வாஷிங்டன்: உலக நாடுகளில் அதிக ஆண்டு ஆட்சியில் இருக்கும் முதல் 10 தலைவர்கள் யார் யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். புதினின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அந்நாட்டில் அதிபர் தேர்தல் வரும் 2024 மார்ச் 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபராக தொடர்ந்து 4 முறை பதவி வகித்துள்ள புதின், 5-வது முறையாகவும் போட்டியிட முடிவு செய்துள்ளார். ரஷ்யாவை பொறுத்தவரை அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் தான்.

ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவியில் இருக்க முடியாது. ஆனால், புதினோ தனது பதவியை நீட்டிக்கும் வகையில் சட்ட திருத்ததை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் 2036 ஆம் ஆண்டு வரை அவரால் அதிபர் பதவியில் நீடிக்க முடியும். ரஷ்யாவின் சர்வ வல்லமை படைத்த தலைவராகவும் உலக அரங்கில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராகவும் புதின் நீடித்து வருகிறார்.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் புதினுக்கு கடுமையான எதிர்ப்புகள் ஒருபக்கம் இருந்தாலும் தொடர்ந்து ரஷ்யாவில் செல்வாக்கு மிக்க தலைவராகவே இருந்து வருகிறார் புதின். சரி அதெல்லாம் இருக்கட்டும். சர்வதேச அளவில் இதுவரை நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்த தலைவர்கள் குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
முதல் இடத்தில் ஒபியாங்: * மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடோரியல் கினியாவில் கடந்த 1979 ஆம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பை செய்து அதிகாரத்தை பிடித்தவர் ஒபியாங். இவர் 44 ஆண்டுகள் தொடர்ந்து அந்த நாட்டில் அதிபராக இருந்தார். உலக அளவில் நீண்ட காலம் இந்த பொறுப்பில் இருந்த தலைவர் ஒபியாங் தான். அவரது ஆட்சியின் கீழ் ஆப்பிரிக்காவின் வடகொரியா என்று ஈக்வடோரியல் கினியா அறியப்பட்டது
* இந்தப் பட்டியலில் 2-வது இடம் வகிப்பது கேமுரூன் நாட்டை சேர்ந்த பியா. மேற்கு ஆப்பிரிக்க நாடான பியாவில் கடந்த 1982 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் அதிபரக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 41 ஆண்டுகளாக அவர் பதவியில் இருந்து வருகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட வயதான உலக தலைவராகவும் (90) இவர் உள்ளார்.
உகாண்டா அதிபர்: * காங்கோ நாட்டின் பிராஸ்ஸாவில்லியின் சஸ்சோ நுஸ்ஸோ 39 வருடமாக அந்த நாட்டின் அதிபராக பதவி வகித்து வருகிறார். 1979- ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தவர். பின்னர் 1997- ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்த நுஸ்ஸோ தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து வருகிறார்.
* உகாண்டா நாட்டின் அதிபர் யோவேரி முசேவேனி (வயது 79) 37 ஆண்டுகளாக அதிபர் பொறுப்பில் இருந்து வருகிறார். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 6-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
* தஜிகிஸ்தானி, ரஹ்மோன் 31 ஆண்டுகளாக அதிபர் பொறுப்பில் இருந்து வருகிறார். அதேபோல், எரித்திரியாவின் அஃப்வெர்கி 30 வருடங்களாக அதிபர் பதவியில் நீடித்து வருகிறார்.
அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ: * பெலாரஸ் நாட்டின் அதிபராக 29 ஆண்டுகளாக அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ நீடித்து வருகிறார். புதினின் நெருங்கிய கூட்டாளியாகவும் இவர் அறியப்படுகிறார்.
* ஜிபூட்டி நாட்டின் அதிபராக உமர் குயெல்லே (வயது 79) பதவி வகித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் 5 முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 24 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்.
* இந்த வரிசையில் 9-வது இடத்தை ரஷ்ய அதிபர் புதின் பிடித்துள்ளார். 71 வயதான புதின் 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிகாரத்திற்கு வந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக ரஷ்யாவின் அதிகாரம் மிக்க உச்சபட்ச பொறுப்பில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
* இந்த பட்டியலில் ருவாண்டா நாட்டின் அதிபர் பவுல் காகமே உள்ளார். மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடான ருவண்டாவில் 2000 ஆம் ஆண்டு முதல் அதிபராக உள்ளார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications