வானத்தில் ஏற்படும் அதிசயம்! "நீல சூப்பர் மூன்!" உங்கள் கண்களை உங்களாலேயே நம்ப முடியாது! சூப்பர்தான்
வாஷிங்டன்: இந்த மாதம் இறுதியில் வானத்தில் ஒரு மிகப் பெரிய அதிசயம் நடக்கப் போகிறது. அது நீங்கள் கண்டிப்பாக மிஸ் செய்யவே கூடாத ஒரு நிகழ்வாக அமையப் போகிறது.
இந்த ஆகஸ்ட் மாதம் விண்வெளியில் பல அதிசய நிகழ்வுகள் நடக்க உள்ளது. ஏனென்றால் இந்த மாதம் நாம் இரண்டாவது சூப்பர் மூனைக் காணும் வாய்ப்பைப் பெறுகிறோம்.. அதுவும் இந்த முறை நீல நிலவு எனப்படும் ப்ளூ மூனை நாம் காண இருக்கிறோம்..

வானில் ஏற்படும் இந்த ப்ளூ மூன் ஏன் இவ்வளவு சிறப்பு.. சூப்பர் முன் நிகழ்வுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம். ஏன் இதனை முக்கிய விஷயமாகப் பார்க்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்
நிலவு: நமது பூமி எப்படி சூரியனைச் சுற்றி வருகிறதோ.. அதேபோல நமது பூமியை நிலவு சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும்.. அப்படிச் சுற்றி வரும் போது குறிப்பிட்ட நேரத்தில் வானத்தில் நிலவு பெரிதாகத் தோன்றும்.. இந்த நிகழ்வு தான் சூப்பர் மூன் என்று அழைக்கப்படும்.. இம்மாத தொடக்கத்தில் அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்தாண்டின் முதல் சூப்பர் மூன் நிகழ்வு நிகழ்ந்தது.
அப்போது நிலவு பூமியிலிருந்து 357,530 கிமீ தொலைவில் இருந்தது. இதனிடையே இப்போது இரண்டாவது சூப்பர் மூன் நிகழ்வு ஏற்பட உள்ளது. இது வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடக்க உள்ளது. முன்பை காட்டிலும் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி நிலவு பூமியில் இருந்து மேலும் நெருக்கமாக இருக்கும்.. அப்போது நிலவு பூமியிலிருந்து 357,244 கி.மீ. தொலைவிற்கு வர உள்ளது. இதில் மற்றொரு சிறப்பும் நிகழ உள்ளது. அதுவே இதனை ப்ளூ மூன் நிகழ்வாக மாற்றுகிறது.
ப்ளூ மூன்: ப்ளூ மூன் என்றால் என்ன எனக் கேட்கிறீர்களா.. "சூப்பர் மூன்" என்பது பூமிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதைக் குறிக்கிறது என்றால் நீல நிலவு எத்தனை முறை நிலவு நமது பூமியைச் சுற்றி வருகிறது என்பதைக் குறிக்கும். பொதுவாகச் சந்திரன் பூமியைச் சுற்றி வர 29.5 நாட்கள் ஆகும். அதேநேரம் சில சமயம் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக முழு நிலவு ஏற்படும். அதை நாம் நீல நிலவு எனக் குறிப்பிடுகிறோம்.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரே மாதத்தில் இரண்டு முறை பவுர்ணமி வரும் போது அதை நீல நிலவு என்று குறிப்பிடுகிறோம். அந்த முழு மாதத்தையும் நாம் நீல நிலவு என்றே குறிப்பிடுகிறோம்.. அதேநேரம் இதற்கும் நிலவின நிறத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. பொதுவாக 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நடக்கும். இதனைத் தான் ப்ளூ மூன் என நாம் குறிப்பிடுகிறோம். இந்த மாதத்தில் சூப்பர் மூனும் வருவது தான் இதை மேலும் சிறப்பானதாக மாற்றுகிறது.
எப்போது நடக்கும்: ப்ளூ மூன் 2, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என்ற போதிலும், இந்த ப்ளூ மூன் காலத்தில் சூப்பர் மூனும் சேர்ந்து வருவது அதிசயம் தான். இதற்கு முன்பு கடந்த டிசம்பர் 2009இல் தான் இந்த நீல சூப்பர் மூன் ஏற்பட்டது. இப்போது இந்த ஆகஸ்ட் 30இல் ஏற்படுகிறது. இதையும் நாம் மிஸ் செய்தால் 2032 வரை காத்திருக்க வேண்டும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications