ரஷ்ய பெண்களுடன் பில்கேட்ஸ்-க்கு கள்ளத்தொடர்பு.. பாலியல் நோயால் பாதிப்பு? பகீர் கிளப்பும் எப்ஸ்டின் பைல்ஸ்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவை உலுக்கி வரும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சார்ந்த ஆவணங்கள் அடுத்தடுத்து வெளியாகி புயலை கிளப்பி வருகின்றன. நேற்று 30 லட்ச பக்க ஆவணங்கள் வெளியாகின. அதில் பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸ்க்கு கள்ளத்தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

அமெரிக்காவின் பெரிய அளவில் பேசும் பொருளாக ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு உள்ளது. ஜெஃப்ரின் எப்ஸ்டீன் என்பவர் வங்கிகளில் இருந்து பல்வேறு அரசியல்வாதிகள், அவர்களின் நிறுவனங்களுக்கு பணம் வாங்கி கொடுக்கும் பணியை மேற்கொண்டார்.

இதனால் அவருக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுடன் நல்ல உறவு இருந்தது. இந்நிலையில் ஜெஃப்ரின் எப்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. அவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து பல பிரபலங்களுக்கு தாரை வார்த்ததாக கூறப்படுகிறது.

இளம்பெண்களுடன் போட்டோ

மேலும் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளின்டன் உள்ளிட்டோருடன் ஜெஃப்ரின் எப்ஸ்டீனுக்கு நல்ல நட்பு இருந்தது. டிரம்ப், ஜெஃப்ரீன் எப்ஸ்டீன் மற்றும் இளம்பெண்களுடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்கள் வெளியாகியது.

அதுமட்டுமின்றி பாலியல் குற்றச்சாட்டடில் ஜெஃப்ரீன் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள சிறையில் எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், இது குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன.

இவர் வெளியில் வந்தால் பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடும் என கருதிய பெரும் புள்ளிகள், அவரை சிறையில் வைத்தே கதையை முடித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான ஆவணங்களை (எப்ஸ்டீன் பைல்கள்) அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு வருகிறது.

30 லட்சம் பக்க ஆவணங்கள்

அந்த வகையில் தற்போது 3 மில்லியனுக்கும் (30 லட்சம்)அதிகமான பக்க ஆவணங்கள், சுமார் 2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி தொழிலதிபர் பில்கேட்ஸ்க்கு கள்ளத்தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.

பில்கேட்ஸ்க்கு கள்ள உறவு

இதுதொடர்பாக ஜெஃப்ரின் எப்ஸ்டின் தனக்கு தானே கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 18 ம் தேதி இ-மெயில் ஒன்றை அனுப்பினார். அந்த இ-மெயிலில் தான் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், , ‛‛மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் ரஷ்ய பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தார்.

அதன்பிறகு பாலியல் ரீதியான நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான மருந்துகளை நாடினார். அவரது மனைவியாக இருந்த மெலிண்டா கேட்ஸ்க்கும் வழங்க முயன்றார். இந்த இ-மெயிலை அழிக்க பில்கேட்ஸ் வலியுறுத்தினார்'' என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

பில்கேட்ஸ் தரப்பு மறுப்பு

ஆனால் இந்த குற்றச்சாட்டை பில்கேட்ஸ் தரப்பு மறுக்கிறது. பில்கேட்ஸ் பற்றி அவதூறான கருத்துகளை பரப்ப முயற்சி நடப்பதாக பில்கேட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பில்கேட்ஸ் சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் கூறுகையில், "இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் அபத்தமானவை, முற்றிலும் பொய்யானவை.

எப்ஸ்டீன், பில் கேட்ஸுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முயன்றார். அது நடக்காததால் அவரை இப்படி இழிவான வகையில் கூறியுள்ளார். பில்கேட்ஸை அவதூறில் சிக்க வைக்க எப்ஸ்டீன் எந்த எல்லைக்கெல்லாம் சென்றுள்ளார் என்பதை தான் இந்த ஆவணங்கள் காட்டுகிறது.

பில்கேட்ஸ் விவாகரத்துக்கும் காரணம்

பில்கேட்ஸ் - மெலிண்டா ஆகியோர் கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்தனர். அதன்பிறகு இருவரும் விவகாரத்து செய்தனர். அந்த சமயத்தில் பில்கேட்ஸ் அளித்த பேட்டியில், ‛எப்ஸ்டீன் உடனான தனது நட்பும் விவகாரத்துக்கு ஒரு காரணம்'' என்று கூறியிருந்தார். இருப்பினும் வேறு எந்த தகவலையும் அவர் கூறவில்லை. இருப்பினும் பில்கேட்ஸ் குறித்த எப்ஸ்டீன் குற்றச்சாட்டுக்கு பிற ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+