Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாட்டிற்கு மாஸ்க்!" உயரிய விருது கொடுத்து கவுரவித்த அறிவியல் உலகம்! நீங்க நினைக்கும் காரணமில்லை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: புவி வெப்ப மயமாதல் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தடுக்க புதிய முயற்சியைப் பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நமது தெருக்களில் மாடுகள் அப்படியே சுற்றிக் கொண்டு இருப்பதை நாம் பார்த்திருக்கலாம். பெரும்பாலான நேரங்களில், இந்த மாடுகளினால் நமக்கு பெரும்பாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இதன் காரணமாக மாடுகளை நாம் பெரிதாகக் கண்டு கொண்டு இருக்க மாட்டோம். ஆனால், நமக்குத் தொல்லை தராத இந்த மாடுகளினால், புவிவெப்ப மயமாதல் வேகமாகிறது என்றால் நம்ப முடிகிறதா!

 புவி வெப்ப மயமாதல்

புவி வெப்ப மயமாதல்

தற்போது உலகின் பெரும்பாலான நாடுகள் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாகப் புவி வெப்ப மயமாதல் உள்ளது. புவி வெப்ப மயமாதல் காரணமாக ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் அனைத்து நாடுகளும், அனைத்து உயிரினங்களும் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்கிறது. இப்படி புவி வெப்ப மயமாதலில் மாடுகளில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுக்களும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனிடையே இதற்காக அட்டகாசமான ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர் பிரிட்டன் ஆய்வாளர்கள்.

 மீத்தேன் வாயு

மீத்தேன் வாயு

மாடுகளில் இருந்து வெளியேறும் புவி வெப்ப மயமாதலுக்குக் காரணமாக இருக்கும் இந்த மீத்தேன் வாயுவைக் குறைக்கவும், காலநிலை மாற்றத்தைக் குறைக்கவும் மாட்டிற்கு அணிவிக்கும் வகையில் பிரத்தியேக மாஸ்க்கை பிரிட்டன் ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். பிரிட்டனை சேர்ந்த Zelp அமைப்பினர் உருவாக்கி உள்ள இந்த மாஸ்குகள் டெர்ரா கார்ட் டிசைன் லேப் விருதைப் பெற்றுள்ளது. புவி வெப்ப மயமாதல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த கண்டுபிடிப்பு முக்கியமானது என்று இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

 பசுமை இல்ல வாசு

பசுமை இல்ல வாசு

இந்த வகை மாஸ்க்குகள் மாடுகளில் இருந்து வெளிவரும் மீத்தேனை கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராவியாக மாற்றுகிறது. ஒவ்வொரு நாளும் மாடுகள் கணிசமான அளவு மீத்தேன் வாயுவை வெளியேற்றுகிறது. பசுமை இல்லா வாயுவான மீத்தேன், கார்பன் டை ஆக்சைடை விட 25 மடங்கு அதிக வெப்பத்தை உண்டாக்குகிறது. எனவே, மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைத்தால், புவி வெப்ப மயமாதல் பிரச்சினையை நம்மால் தாமதப்படுத்த முடியும்.

 130 கேலன்கள்

130 கேலன்கள்

ஒரு கறவை மாட்டில் இருந்து ஒரு நாளைக்கு 130 கேலன்கள் வரை மீத்தேன் கிடைக்கும். உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியன் மாடுகள் உள்ள நிலையில், இது புவி வெப்ப மயமாதலில் முக்கிய பங்கை ஆற்றுகிறது. புவி வெப்ப மயமாதலுக்குக் காரணமான கேஸ்களை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் 14% வரை உற்பத்தி செய்கின்றன. கடந்த காலங்களில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மாடுகளின் உணவு முறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. இருப்பினும், அவை பெரியளவில் பலன் அளிப்பதாக இல்லை.

 மாஸ்க்கில் சென்சார்

மாஸ்க்கில் சென்சார்

இந்தச் சூழலில் தான் பிரிட்டன் ஆய்வாளர்கள் இந்த புதிய வகை மாஸ்க்கை கண்டுபிடித்துள்ளனர். இந்த மாஸ்க்கின் நுனியில் உள்ள ஒரு சென்சார் மாடு மூச்சுவிடும் போது, அதில் இருக்கும் மீத்தேன் வெளியேற்றத்தின் சதவீதத்தைக் கண்டறியும். மீத்தேன் அளவு அதிகமாக இருக்கும் போது அதைத் தடுக்கும். இதற்குத் தான் இப்போது உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+