‛கசாப்பு கடைக்காரர்’.. வரலாற்று உண்மை அதுதான்.. மீண்டும் பிரதமர் மோடியை சீண்டிய பாகிஸ்தான் அமைச்சர்
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியை ‛குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர்' என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலால்வால் பூட்டோ சர்தாரி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் அவர் மீண்டும் பிரதமர் மோடியை சீண்டும் வகையில் தான் வரலாற்று உண்மையின் அடிப்படையில் தான் கருத்து தெரிவித்துள்ளதாக கூறியது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வகையில் உள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அவ்வப்போது இந்தியாவை சீண்டி வருகிறது.
இந்த வேளையில் பாகிஸ்தானுக்கு நம்நாடு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா ஐநா பாதுகாப்பு சபையில் கூட்டம் நடந்தது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில்
இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இதேபோல் பாகிஸ்தான் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கலந்து கொண்டார். இந்த வேளையில் ‛காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம். இதுதொடர்பாக ஐநா சபையில் இந்தியா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என வலியுறத்தினார். இதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ‛‛பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. இந்தியாவில் பல தாக்குதல் நடத்திய ஒசாமா பின்லேடன் உள்பட பல பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் வசித்தனர். அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் இதுபற்றி பேச வேண்டாம்''என விளாசினார்.

பிரதமர் மோடி மீது விமர்சனம்
இதையடுத்து வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி பிரதமர் மோடியை கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். அப்போது, ‛‛ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால் இந்தியாவின் பிரதமரான குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார். பிரதமர் மோடியை நுழைய அமெரிக்க தடை விதித்து இருந்தது. பிரதமர் மோடி ஹிட்லரின் நாசி கொள்கையால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்'' என கூறியிருந்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பாஜக சார்பில் நாட்டின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பூலாவல் பூட்டோ சர்தாரியின் போட்டோ எரித்து எதிர்ப்பு காட்டப்பட்டது.

மீண்டும் சீண்டிய பாகிஸ்தான் அமைச்சர்
இந்நிலையில் தான் பிலாவல் பூட்டோ சர்தாரி, பளூம்பெர்க்கிற்கு பேட்டியளித்துள்ளார். அதிலும் அவர் பிரதமர் மோடி பற்றிய அவரது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்து மீண்டும் இந்தியாவிடம் சீண்டியுள்ளார். இந்த பேட்டியில் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறுகையில், ‛‛நான் வரலாறு கூறும் உண்மையின் அடிப்படையில் கருத்து தெரிவித்துள்ளேன். அதனை பாஜகவினர் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் அவமதிப்பு செய்வதாக எடுத்து கொண்டுள்ளனர். பிரதமர் மோடியின் கட்சியை சேர்ந்த ஒருவர் எனது தலைக்கு ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளது. அண்டை நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைக்கு பரிசு அறிவித்ததன் மூலம் எல்லை தாண்டப்பட்டுள்ளது'' என மீண்டும் சீண்டியுள்ளார்.

இந்தியாவில் கிளம்பிய எதிர்ப்பு என்ன?
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பாகிஸ்தான் அமைச்சரின் இந்த கருத்துக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் பாஜகவினர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். பிலாவல் பூட்டோ சர்தாரியின் போட்டோக்களை தீயிட்டு எரித்தனர். மேலும் உத்தரபிரதேச பாஜக தலைவர் மனுபால் பன்சால், பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் தலையை துண்டிப்பவருக்கு ரூ.2 கோடி பரிசு அறிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.

வெளியுறத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு
அதேபோல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ‛‛விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்ந்த நாடு தான் பாகிஸ்தான். லக்வி, ஹபீஸ் சையத், மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் என ஐநாவால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட 126 பேருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு பாகிஸ்தான். ஐநா.வால் தடை விதிக்கப்பட்ட 27 பயங்கரவாத அமைப்புகளை செயல்பட அனுமதித்திருக்கும் நாடு பாகிஸ்தான். அந்த நாட்டைச் சேர்ந்த பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு'' என்றார். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் பிலாவல் பூட்டோ சர்தாரி சீண்டியுள்ளார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications