டிரம்ப் இருக்கட்டும்.. அமெரிக்காவில் மாணவர் விசாவை ஹெச் 1பி விசாவாக மாற்ற முடியுமா? இதுதான் ரூல்ஸ்
வாஷிங்டன்: கல்லூரி படிப்பிற்கு அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு மாணவர்களுக்கு F-1 விசா வழங்கப்படும். அதேநேரம் F-1 விசா வைத்துள்ள மாணவர்கள் அதை ஹெச் 1பி விசாவாக மாற்ற முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இந்தியர்கள் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்காவுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

அமெரிக்கா ஹெச் 1பி விசா
அமெரிக்காவில் ஐடி துறையில் தேவை அதிகமாக இருக்கிறது. அந்த தேவையை இந்தியா பூர்த்தி செய்வதால் அங்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதன் காரணமாகவே அங்கு ஹெச் 1பி விசாவால் அதிகம் பலன் பெறும் நாடாக இந்தியா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ஹெச் 1பி விசாக்களில் பெரும்பகுதி இந்தியர்களுக்கே செல்வதே இதற்குச் சாட்சி.
வேலை மட்டுமின்றி உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் அமெரிக்கா இருக்கிறது. இதனால் கல்லூரி படிப்பிற்காகவும் இந்தியர்கள் பலரும் அமெரிக்கா செல்கிறார்கள். அதுபோல செல்வோர் மாணவர் விசாவில் அமெரிக்கா செல்வார்கள். அந்த விசாவை வைத்து அவர்கள் வேலை செய்வது சட்டவிரோதமானதாகும். இப்போது நம்மில் பலருக்கும் ஒரு கேள்வி வரலாம். அதாவது மாணவர் விசாவை அப்படியே ஹெச் 1பி விசாவாக மாற்ற முடியுமா என்பது தான் அது. இதற்கான விடையை நாம் பார்க்கலாம்,
குடியேற்ற முறை
அமெரிக்காவின் குடியேற்ற முறையைப் புரிந்துகொள்வது சிக்கலானது. அமெரிக்காவில் படித்து முடித்த பிறகு அங்கேயே வேலைக்குச் சேர முடியுமா என்பதே அங்குப் படிக்கும் பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்களின் கேள்வியாக இருக்கிறது. மாணவர்களின் எஃப் 1 விசாவை ஹெச் 1பி விசாவாக மாற்ற முடியுமா எனக் கேட்டால்.. ஆம் மாற்ற முடியும் என்பதே பதிலாகும். ஆனால், குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்தால் மட்டுமே எஃப்-1 விசாவை ஹெச் 1 பி விசாவாக மாற்ற முடியும்.
கண்டிஷன்கள் என்ன
அதாவது F-1 விசாவில் உள்ள சர்வதேச மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் வேலை கொடுத்தால் மாணவர் விசாவை ஹெச் 1பி விசாவாக மாற்றலாம். அந்த வெளிநாட்டு மாணவர் சார்பாக அமெரிக்க நிறுவனம் அங்குப் படிவம் I-129ஐ தாக்கல் செய்ய வேண்டும். இப்படி விண்ணப்பித்தாலும் கூட அனைவருக்கும் ஹெச் 1பி விசா கிடைத்துவிடாது. ஏனென்றால் ஹெச் 1பி விசாவுக்கு என அதிகபட்ச வரம்பு உள்ளது. ஓராண்டிற்கு அமெரிக்கா அதிகபட்சம் 65,000 ஹெச் 1 பி விசாக்களை மட்டுமே வழங்கும்.
இது தவிரக் கூடுதலாக அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற 20,000 பேருக்கு ஹெச் 1பி விசா வழங்கப்படும். இதுபோல தனியாக ஸ்லாட் இருப்பதால் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஹெச் 1பி விசா கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கேப் கேப் விதி
அமெரிக்க அரசு வழங்கும் H-1B விசாவின் வேலிடிட்டி எப்போதும் அக்டோபர் 1ம் தேதி தான் தொடங்கும். ஒருவேளை அதற்கு முன்பே மாணவர் விசா காலாவதியாகிவிட்டால் Cap-Gap முறையில் விசாவை நீடிக்கலாம். இதனால் மாணவர் விசா முடிந்து, ஹெச் 1பி விசா வேலிடிட்டி தொடங்கும் காலம் வரை அவர்கள் தாய்நாட்டிற்குச் செல்ல தேவையில்லை. அமெரிக்காவிலேயே தொடர்ந்து தங்கலாம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications