சீனா ராக்கெட்டால் விண்வெளியில் ஏற்பட்ட ஆபத்து.. இந்திய சாட்டிலைட்களுக்கும் சிக்கல்.. என்ன மேட்டர்
வாஷிங்டன்: விண்வெளி துறையில் இப்போது பல்வேறு நாடுகளும் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவும் கூட தொடர்ச்சியாக விண்வெளி துறையில் முக்கிய சாதனைகளைப் படைத்து வருகிறது. ஆனால், இப்போது சீன ராக்கெட் ஒன்று இப்போது விண்வெளியில் பல நூறு சாட்டிலைட்களை ஆபத்தில் தள்ளியுள்ளது. இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பல்வேறு உலக நாடுகளும் இப்போது விண்வெளி துறையில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஸ்பேஸ் சார்ந்து தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை வெற்றிகரமாகச் செய்து வருகின்றன.

சீனாவும் விண்வெளி துறையில் சிறப்பான சாதனைகளைப் படைத்தாலும், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கையாகவே இருக்கிறது. அப்படி தான் இப்போது சீன ராக்கெட்டால் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
வெடித்துச் சிதறிய ராக்கெட்: விண்வெளியில் சீன ராக்கெட் வெடித்துச் சிதறி இருக்கும் நிலையில், அது அங்கே 700க்கும் மேற்பட்ட விண்வெளிக் குப்பைகளை உருவாக்கியுள்ளது.. இது விண்வெளியில் சுற்றி வரும் இந்திய சாட்டிலைட்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஆபத்தில் தள்ளியுள்ளது. இந்த குப்பைகள் செயற்கைக்கோள்களில் மோதினால் அவை பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்து மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதாவது சீன அரசுக்குச் சொந்தமான ஷாங்காய் ஸ்பேஸ்காம் சேட்டிலைட் டெக்னாலஜி கடந்த செவ்வாய்க்கிழமை 18 இணைய சாட்டிலைட்களை சுற்றுப்பாதையில் செலுத்தியது.. இதை எடுத்துச் சென்ற ராக்கெட் சாட்டிலைட்களை ரிலீஸ் செய்த உடனேயே எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது.. மொத்தம் 700 முதல் 900 துண்டுகளாக வெடித்துச் சிதறின. அவை தான் இப்போது சாட்டிலைட்களுக்கு ஆபத்தானதாக மாறியிருக்கிறது.
பெரிய ஆபத்து: இந்த எதிர்பாராத சம்பவத்தால் விண்வெளியில் சுமார் 800 கிமீ தூரத்திற்கு இது குப்பைகளை உருவாக்கியுள்ள நிலையில், இதனால் ஏற்படும் பிரச்சினை பல ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். சீன ராக்கெட் விண்வெளியில் சுற்றி வந்த வேறு ஒரு பொருளுடன் மோதியதால் இது ஏற்பட்டதா இல்லை பயன்படுத்தப்படாத ராக்கெட் எரிபொருள் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
1000+ சாட்டிலைட்கள்: ஆனால், சீனா ராக்கெட்டின் இந்த குப்பைகளால் விண்வெளியில் உள்ள சுமார் 1,100 செயற்கைக்கோள்கள் ஆபத்தில் இருப்பதாக ஸ்லிங்ஷாட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆட்ரி ஷாஃபர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ராக்கெட் வெடித்து சிதறிய இடத்திற்கு 5 கிமீ தொலைவில் 1,100க்கும் மேற்பட்ட சாட்டிலைட்கள் உள்ளன.. எதாவது ஒரு சாட்டிலைட் உடன் மோதினால் கூட அவை மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அவை விண்வெளியில் மேலும் மேலும் அதிக குப்பைகளையே ஏற்படுத்தும்" என்று அவர் தெரிவித்தார்.
முதல்முறை இல்லை: சீனாவுக்குச் சொந்தமான ராக்கெட்கள் இதுபோல விண்வெளியில் குழப்பத்தை ஏற்படுத்துவது முதல்முறை இல்லை. அவர்களின் ராக்கெட் தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக இதற்கு முன்பும் சில முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. சில முறை அவை கட்டுப்பாடு இல்லாமல் விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்து வெடித்துச் சிதறும் சம்பவங்கள் கூட நடந்துள்ளன. சீனா இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக நாடுகள் எச்சரித்தாலும் கூட சீனா இந்த விவகாரத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டியே வருகிறது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications