சதிகார சீனா.. இந்தியாவின் ரபேல் போர் விமானங்களை குறிவைத்து AI-யால் செய்த வேலை.. அமெரிக்கா பகீர்
வாஷிங்டன்: ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. பாகிஸ்தான் சீனாவின் வான்வெளி பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திய நிலையில் அதனை தாண்டி நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தான் பதம் பார்த்தன. இதனால் ஷாக்கான சீனா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து ஏஐ உதவியுடன் ரஃபேல் போர் விமானங்களை அழித்ததாக போலியான போட்டோக்களை போலி வலைதளங்கள் மூலம் பரப்பி தனது மார்க்கெட் மதிப்பை உயர்த்த திட்டமிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரபேல் போர் விமானங்களை குறிவைத்து சீனா செய்த சதி என அமெரிக்கா சொன்ன தகவல் பின்வருமாறு:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை கடந்த மே மாதம் 7 ம்தேதி தொடங்கியது. பாகிஸ்தானுக்குள் நுழைந்து நம் நாட்டின் ஏவுகணைகள் அதிரடி தாக்குதல் நடத்தின. 9 பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளங்கள், விமானப்படை தளங்களை நம் நாட்டின் படைகள் அழித்தன.

பதிலடி கொடுக்க முயன்ற பாகிஸ்தானின் ட்ரோன்கள், விமானங்கள், ஏவுகணைகள் வானிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டன. மே 10ம் தேதி வரை இந்த மோதல் நடந்த பிறகு பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. எங்களை தாக்காதீங்க என்று கூறி சரணடைந்தது. இதையடுத்து நம் நாடும் தாக்குதலை நிறுத்தியது.
இந்த ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி மற்றும் சீனா உதவி செய்தன. சீனா ராணுவ விமானங்கள், வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை பாகிஸ்தானுக்கு தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. அதேபோல் துருக்கி, பாகிஸ்தானின் நெருகங்கிய நட்பு நாடாகும். இதனால் இருநாடுகளும் உதவி செய்தன. குறிப்பாக நம் நாட்டின் அனுப்ப்படும் ஏவுகணைகளின் திசையை கண்காணித்து சீனா பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தது.
இருப்பினும் கூட நம் நாட்டு படை வீரர்கள் துல்லியமாக தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை பந்தாடின. அதுமட்டுமின்றி சீனாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை தகர்த்தன. இது சீனாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஏற்கனவே சீனாவின் பாதுகாப்பு உபகரணங்கள் உலகளவில் நல்ல மதிப்பை பெறவில்லை. பாகிஸ்தான் உள்பட சில நாடுகள் மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில் அதனையும் நம் நாடு அழித்தது சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இப்படியான சூழலில் தான் சீனா நம் நாட்டுக்கு எதிராக போலியான செய்திகளை பரப்பி தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயன்றதாக அமெரிக்கா திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது இந்தியாவின் ரபேல் போர் விமானங்கள் பற்றி தவறான செய்திகளை பரப்ப சீனா திட்டமிட்டு செயல்பட்டுள்ளதாம். இதனை அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் அமெரிக்கா - சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மறுஆய்வு ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ‛‛சீனா ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உலகளாவிய பாதுகாப்பு அம்சங்களுக்கு பங்கம் விளைவிக்க நினைக்கிறது. இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு சீனா ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட போலி போட்டோக்களை பரப்பும் வகையில் சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி உள்ளது.
குறிப்பாக சீனாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளால் இந்தியா பயன்படுத்தும் பிரான்ஸிடம் இருந்து வாங்கும் ரபேல் போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிதைந்த பாகங்களை போலியாக ஏஐ மூலமாக உருவாக்கி போலி வலைதளங்கள் வழியாக பரப்பி உள்ளது. இதன்மூலம் சீனா பாதுகாப்பு துறை சார்ந்த சந்தையை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதோடு பிரான்ஸின் ரபேல் போர் விமானங்களின் மீதான உலகளாவிய பார்வையை குறைமதிப்புக்கு உட்படுத்தவும் சீனா முயற்சித்துள்ளது. ரபேல் போர் விமானங்கள் போருக்கு உகந்தது இல்லை என்பதை பரப்பவும், ரபேலுக்கு பதில் சீனா தனது ஜே -35ரக போர் விமானங்களை விளம்பரப்படுத்தி அதன் விற்பனையை சீனா அதிகரிக்க திட்டமிட்டு இந்த சதியை முன்னெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு தற்போது அதிககவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே இருந்த பகை தற்போது படிப்படியாக மறைந்து வருகிறது. சமீபத்தில் தான் பிரதமர் மோடி 5 ஆண்டுகள் கழித்து சீனாவுக்கு சென்றார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது பற்றி விவாதித்தார். அதன்பிறகு இருநாடுகள் இடையே நிறுத்தி வைக்கப்பட்ட நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் தான் தற்போது அமெரிக்கா, இப்படி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications