HRஐ கட்டிப்பிடித்து மாட்டினாரே! மீண்டும் வீடியோவில் சிக்கிய அமெரிக்க சிஇஓ.. இந்த முறை என்னாச்சு?
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோல்ட் பிளே நிகழ்ச்சியில் உடன் வேலை பார்த்த பெண் HRஐ கட்டிப்பிடித்த சர்ச்சையில் சிக்கியவர் ஆண்டி பைரன். இந்தச் சம்பவம் நடந்து இரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இவர் இப்போதும் மீண்டும் பொதுவெளியில் பெண் ஒருவருடன் வலம் வந்து சிக்கியுள்ளார். இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த கோல்ட் பிளே இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பலரும் இசை நிகழ்ச்சியை என்ஜாய் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த கிஸ் கேமரா பல அழகிய நிகழ்வுகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தது. ஆனால், அதுவே ஒரு காதல் ஜோடிக்கு வில்லனாக மாறியது.

கோல்ட் பிளே இசைக்கச்சேரி
அதாவது இந்த கிஸ் கேமராவில் ஒரு ஜோடியை படம் பிடித்துக் காட்டுவார்கள். அப்போது அந்த ஜோடி முத்தம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும். அப்படித் தான் அந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆஸ்டிரானமர் சிஇஓ ஆண்டி பைரனை அந்த கேமராவில் காட்டினார்கள். அதில் அவர் பெண் ஒருவரைக் கட்டித் தழுவிக்கொண்டு இருந்தார். காதலுடன் அந்த பெண்ணை கட்டித் தழுவிக் கொண்டு இருந்ததைப் பெரிய ஸ்க்ரீனில் காட்டிவிட்டனர்.
இதில் விஷயம் என்னவென்றால் ஆண்டி பைரன் கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்தவர் அவரது மனைவி இல்லை. அதே நிறுவனத்தில் ஹெச்ஆர் தலைவராக இருந்த கிறிஸ்டின் காபோட் தான் அது. இருவருமே வேறு வேறு நபருடன் திருமணம் ஆனவர்கள் என்ற போதிலும், இருவருக்கும் இடையே கள்ள உறவு இருந்துள்ளது. அதுவே இந்த இசைக் கச்சேரியில் அம்பலமாகிவிட்டது.
கிஸ் கேமரா
இந்தச் சம்பவம் அப்போது மிகப் பெரியளவில் வெடித்தது. கிஸ் கேமராவில் அவர்களைக் காட்டியபோது, பதறிப் போன காபேட் அங்கிருந்து ஓடிவிட்டார். பைரன் அப்படியே தலையில் கை வைத்தபடி உட்கார்ந்துவிட்டார். அது பெரிய சர்ச்சையாக வெடித்ததால் ஆண்டி பைரன், கிறிஸ்டின் காபோட் என இருவருமே தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
மீண்டும் வெளியே வந்தார்
இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், இப்போது அஸ்ட்ரோனமர் மாஜி சிஇஓ ஆண்டி பைரன் மீண்டும் ஒரு பெண்ணுடன் பொதுவெளியில் வந்துள்ளார். ஆனால், இந்த முறை அவர் தனது மனைவி மெகனுடன் வெளியே வந்திருக்கிறார். இருவரும் இணைந்து விடுமுறையைக் கழித்து வருகிறார்கள். இது தொடர்பான போட்டோவை டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.
மனைவி மெகன்
அதில் பைரனும் மெகனும் வீட்டில் இருந்து வெளியேறுவது, இருவரும் ஜாலியாக விடுமுறையைக் கொண்டாடுவது உள்ளிட்ட போட்டோக்கள் இடம்பெற்று இருக்கிறது. இருவருமே தங்கள் திருமண மோதிரங்களை அணிந்திருந்ததும் கவனிக்கத்தக்கது. கிஸ் கேமாவில் சிக்கிய பிறகு பைரனிடம் இருந்து மெகன் விவாகரத்து பெற உள்ளதாகச் சொல்லப்பட்டது. அதற்கேற்ப கோல்ட் பிளே நிகழ்ச்சிக்குப் பிறகு மெகன் பெரும்பாலும் பொது வெளியில் வராமலேயே இருந்தார்.
மேலும், சமூக வலைத்தளங்களிலும் தனது கணவரின் பெயரை நீக்கியிருந்தார். மேலும், கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வேறு ஒரு வீட்டிற்கும் குடிபெயர்ந்தார். இதனால் தான் இந்த தம்பதி விவாகரத்து பெற போவதாக சொல்லப்பட்டது. இருப்பினும், மனைவி உடன் இருக்கும் தனது உறவைச் சரி செய்யவே பைரன் விரும்புவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications