ஒரு நாள் பாதிப்பில் இந்தியா 2வது இடம், ஒரு நாள் அதிக மரணத்திலும் 2வது இடம்.. டாப் 10 நாடுகள்.
வாஷிங்டன்: உலகிலேயே அதிக கொரோனா பாதிப்பு உள்ள நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை பிரேசிலும், மூன்றாவது இடத்தை இந்தியாவும், 4வது இடத்தை ரஷ்யாவும் பிடித்துள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 1.48 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் குணம் அடைந்துள்ளனர். அதாவது 88.97 லட்சம் பேர் குணம் அடைந்தனர்.
தற்போதைய நிலையில் 53 லட்சம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 6.12லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

டாப் 4 நாடுகள்
உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 39.60லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வது இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 21.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரானா தொற்றால் இதுவரை 11.54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவில்
கொரோனா தொற்றால் இதுவரை 7.77 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10வது இடம் இங்கிலாந்து
ஐந்தாவது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவில் 3.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6வது இடத்தில் உள்ள பெரு நாட்டில் 3.57 லட்சம் பேரும், 7வது இடத்தில் உள்ள மெக்ஸிகோவில் 3.4 லட்சம் பேரும், 8வது இடத்தில் உள்ள சிலியில் 3.3லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9வது இடத்தில் உள்ள ஸ்பெயினில் இதுவரை 3.1லட்சம் பேரும், 10வது இடத்தில் உள்ள இங்கிலாந்தில் 2.95 லட்சம் பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 10 நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட 3 நாடுகளில் மட்டும் 70லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 50 சதவீத கொரோனா பாதிப்பு இந்த மூன்று நாடுகளில் உள்ளது.

அமெரிக்கா பிரேசில்
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 1.43 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் 80,000 பேரும், இங்கிலாந்தில் 45 ஆயிரம் பேரும், இத்தாலியில் 35 ஆ யிரம் பேரும், பிரான்ஸில் 30 ஆயிரம் பேரும், மெக்ஸிகோவில் 39 ஆயிரம் பேரும், இந்தியாவில் 28,000 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா முதலிடம்
உலகிலேயே நேற்று கொரோனாவால் அதிகபட்சமாக அமெரிக்காவில் 62 ஆயிரம் பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

பிரேசில் முதலிடம்
உலகிலேயே அதிகபட்சமாக பிரேசிலில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 718 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரு நாளில் 596 பேர் பலியாகினர். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 503 பேர் மரணம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications