கொரோனா கோரத்தாண்டவம் - உலகம் முழுவதும் 28,16,29,450 பேர் பாதிப்பு, 54,22,062 பேர் மரணம்
உலகம் முழுவதும் ஒரே நாளில் 6,70,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 4,24,064 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.
வாஷிங்டன் : உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 6,70,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 28,16,29,450 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 4,24,064 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகாலமாக உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கோவிட் 19 தொடங்கி உருமாறிய பல வைரஸ்கள் மக்களை தாக்கி உயிரைக் குடித்து வருகின்றன. தடுப்பூசி செலுத்தியும் வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 4,24,064 பேர் மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் 25,08,53,485 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4,464 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் மொத்தம் 54,22,062 பேர் உயிரிழந்துள்ளனர்.

1,75,705 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 1,75,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,36,18,078 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 512 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் கொரோனாவால் மொத்தம் 839,101 பேர் மரணமடைந்துள்ளனர்.
இங்கிலாந்து பாதிப்பு

1,19,14,919 பேர் பாதிப்பு
இங்கிலாந்தில் ஒரே நாளில் 98,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,22,09,991 அதிகமாக உயர்ந்துள்ளது. 143 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஓமிக்ரான் பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் இரவு கேளிக்கை விடுதிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஷ்யா, துருக்கியில் பாதிப்பு
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 937 பேர் மரணமடைந்துள்ளனர். துருக்கி நாட்டில் 26,099 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 93,33,223 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 81,733 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

ஐரோப்பிய நாடுகளில் பரவல்
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் 30,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 91,46,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,22,898 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 53,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,32,626 பேராக அதிகரித்துள்ளது. இத்தாலி நாட்டில் 30,810 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 56,78,112 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 1,36,753 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications