அமெரிக்கா, பிரிட்டனில் கொரோனா கோரத்தாண்டவம் - அதிகரிக்கும் உயிரிழப்புகள்
அமெரிக்கா, பிரிட்டனில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் 5,475 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் மொத்தம் 54,08,722 பேர் உயிரிழந்துள்ளனர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் ஒரே நாளில் 1,22,186 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன் மட்டுமல்லாது பிரான்ஸ்,இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா 4வது அலை தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமிக்ரான் என வைரஸ் பல பெயர்களில் மாறி மாறி மக்களைத் தாக்கி வருகிறது. தடுப்பூசி செலுத்தினாலும் உலகம் முழுவதும் கொரோனாவின் வீரியம் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உலகம் முழுவதும் ஒரே நாளில் 8,03,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,93,18,609 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 24,96,30,150 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் 5,475 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் மொத்தம் 54,08,722 பேர் உயிரிழந்துள்ளனர்

8,37,655 பேர் மரணம்
அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 1,92,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,29,80,864 பேராக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 731 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் கொரோனாவால் மொத்தம் 8,37,655 பேர் உயிரிழந்துள்ளனர்.

1,22,186 பேர் ஒரே நாளில் பாதிப்பு
இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரமாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் 1,22,186 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,18,91,292 அதிகமாக உயர்ந்துள்ளது.

சிறுவர்களுக்குத் தடுப்பூசி
கொரோனா தொற்று பாதிப்பால் 137 பேர் இறந்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,47,857 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99,61,369 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது 17,82,066 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அங்கு 5 முதல் 11 வயதிற்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Recommended Video

அதிகரிக்கும் மரணங்கள்
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,703 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 998 பேர் மரணமடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் 94,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 89,83,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,22,462 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி நாட்டில் 50,599 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,36,386 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications