வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ்.. இறக்கும் அபாயத்தில் யார் அதிகம்? அதிர வைக்கும் சுய விவர புள்ளி விவரங்கள்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 61 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி. 86,000 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இன்றுவரை கிட்டத்தட்ட 3,000 பேர் உயிரிழந்துள்ளனர், இறக்கும் அபாயத்தில் இருப்பவர்கள் யார் யார் என்பது குறித்து விளக்கம் அளித்த நிபுணர்கள், அதில் தீவிரம் கவனம் செலுத்துவதாக தெரிவித்தனர்.

Recommended Video

    Coronavirus spreads in 7 Middle East Countries

    அதேநேரம் உலக அளவில் ஒட்டுமொத்த இறப்பு விகிதம் (உண்மையில் எவ்வளவு பேர் இறந்தார்கள்) குறித்து சரியான தகவல்கள் இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

    சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் அந்த நாட்டில் சுமார் 78 பேருக்கு பரவிவிட்ட நிலையில் உலகின் 63 நாடுகளுக்கு தற்போது பரவி விட்டது.

    யாருக்கு பாதிக்கும்

    யாருக்கு பாதிக்கும்

    கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறியவே அவரை 14 நாட்கள் தனிமையில் வைத்து பரிசோதிக்க வேண்டும். அப்போது தான் தெரிய வரும் என்பதால் மிக விரைவாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூச்சுக்காற்று, அவரின் இருமல், எச்சில் போன்றவற்றின் மூலம் மற்றவருக்கும் கொரோனா பரவுகிறது. இது பரவாமல் தடுக்க சீனாவில் முகத்தில் முகமூடி அணிந்தபடிதான் மக்கள் பயணித்து வருகிறார்கள்.

    எப்படி பரவியது

    எப்படி பரவியது

    இந்நிலையில் சீனாவில்இருந்து தென்கொரியா, ஜப்பான், வடகொரியா, இத்தாலி, சிங்கப்பூர், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிவேக கொரோனா பரவி வருகிறது. உலகில் 61 நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் மேற்கண்ட நாடுகளில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இங்கு மற்ற நாடுகளை ஒப்பிடும் போது உயிரிழப்புகளும், பரவும் வேகமும அதிகம்.

    இடர் மதிப்பீடு உயர்வு

    இடர் மதிப்பீடு உயர்வு

    இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ்க்கு எதிரான உலகளாவிய இடர் மதிப்பீட்டை வெள்ளிக்கிழமை தனது உயர்மட்ட நிலைக்கு உயர்த்தியது, உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ள கொரோனா ஒரு தொற்றுநோய்க்கு நிகராக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நிபுணர்கள் கொரோனா வைரஸ் யாரை அதிகம் கொல்கிறது என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதய பாதிப்பு உள்ளவர்கள்

    இதய பாதிப்பு உள்ளவர்கள்

    வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில், சீனாவில் 72,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளிம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. ஆரம்ப புள்ளிவிவரங்களின்படி, இதய பாதிப்பு உள்ள வயதானவர்கள் (pre-existing heart condition ) அல்லது உயர் இரத்த அழுத்தம் (hypertension) உள்ள வயதானவர்களை மிக அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். இவர்கள்தான் அதிகம் இறந்துள்ளார்கள்.

    60ஐ கடந்தவர்கள்

    60ஐ கடந்தவர்கள்

    பிப்ரவரி மாத மத்தியில் 44,700 நோய்த்தொற்றாளர்களிடம் இருந்து நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள் மூலம் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தது 60 வயதுடையவர்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்டவர்கள் என்று ஆய்வு கூறுகிறது, இது அதிகாரப்பூர்வ சீனா சிடிசி வார இதழில் வெளியிடப்பட்டது.

    இத்தாலி நிலவரம்

    இத்தாலி நிலவரம்

    சீனாவிற்கு வெளியில் இறந்தவர்கள் குறித்து ஆரம்ப அறிக்கைகளும் சீனாவில் இறந்தவர்கள் குறித்த ஆய்வு அறிக்கையும் கிட்டதட்ட ஒரேமாதிரி தான் உள்ளது. இத்தாலியில் பாதிக்கப்பட்டு இறந்த 12 பேரில் பெரும்பாலும் 80 வயதுடையவர்கள் என்பது தெரிந்துள்ளது. அதேபோல் இறந்தவர்களில் 60 வயதிற்குட்பட்டவர்கள் யாரும் இல்லை. இறந்தவர்களில் பலருக்கு இதய பிரச்சினைகள் இருந்தன.

    ஆண் பெண் வேறுபாடு

    ஆண் பெண் வேறுபாடு

    சீனா ஆய்வில் ஆண்கள் பெண்களை விட கிட்டத்தட்ட 3 முதல் 2 என்ற வித்தியாசத்தில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் அது நடத்தை காரணமாக இருந்ததா என்றால் தெரியவில்லை. சீனாவில் பெரும்பாலான ஆண்கள் புகைபிடிக்கிறார்கள்..சில பெண்களும் செய்கிறார்கள், ஹார்மோன் வேறுபாடுகள் போன்ற உயிரியல் காரணிகள் ஏதும் உள்ளதா என்பது இன்னும் அறியப்படவில்லை.

    குழந்தைகளை தாக்கவில்லை

    குழந்தைகளை தாக்கவில்லை

    சீனா ஆய்வில் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்றால் குழந்தைகள் யாரும் கொரோனாவால் பாதித்து உயிரிழக்கவில்லை. 10-19 வயது உடையவர்களில் ஒரு சதவீதம் பேரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது. ஆனால் . 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்புகள் எதுவும் இல்லை.

    ஏன் பாதிக்கவில்லை

    ஏன் பாதிக்கவில்லை

    "20 வயதிற்குட்பட்டவர்களிடையே குறைவான தொற்றுநோய் பாதிப்பு ஏன் என்பது குறித்த விவரங்களை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம் என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் ஃபோகார்டி சர்வதேச மையத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சிசில் விபூட் ஏ.எஃப்.பி.க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவரது கூற்றுபடி, ஏன் கொரோனாவை குழந்தைகளை இளைஞர்களை தாக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. இதற்கான முடிவு தெரியாமல் விஞ்ஞானிகள் தலையை பிய்த்துக்கொண்டு தவிக்கிறார்கள். மற்றபடி இதயம் பலகீனம் ஆனவர்கள், ரத்த அழுத்தம் உடையவர்கள் இறக்கிறார்கள்.

    English summary
    older adults with pre-existing heart conditions or hypertension face a sharply higher risk, according to preliminary statistics of coronavirus death
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X