வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூர்ந்து கவனிச்சு நல்லா கேளுங்க.. மோடி அப்படி சொல்லவேயில்லை.. அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    PM Narendra Modi's Speech | Howdy Modi Event | Address to Indian diaspora

    வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி. 'ஆப் கி பார் டிரம்ப் சர்கார்' என கூறிருந்தார். இந்த வாசகத்தை அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் என்று மட்டுமே பிரதமர் மோடி சொன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

    அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி சுமார் 50 ஆயிரம் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருடன் அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்றார்.

    இந்த விழாவில் டிரம்ப் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ஒரு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என்ற நிலையிலிருந்து அமெரிக்க அதிபராக ட்ரம்ப் உயர்ந்துள்ளார்.

     டிரம்ப் சர்க்கார்

    டிரம்ப் சர்க்கார்

    நண்பர்களே ஒட்டுமொத்த இந்தியாவும், அதிபர் ட்ரம்புடன் நன்கு தொடர்பு கொண்டுவிட்டது. 'ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்' என்று எல்லோரும் கூறுங்கள் எல்லோரும் இந்த வாசகத்தை உரக்க சொல்லுங்கள். அதிபர் வேட்பாளராக டிரம்ப் இந்த வாசகத்தை தனது தேர்தலில் பயன்படுத்தி உள்ளார் என பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.

    தேர்தல் பிரச்சாரம்

    தேர்தல் பிரச்சாரம்

    இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது 2020ம் ஆண்டு தேர்தலில் டிரம்பின் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி 'ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

    ஜெய்சங்கர் மறுப்பு

    ஜெய்சங்கர் மறுப்பு

    இந்நிலையில் இது தொடர்பாக மூன்று நாள் சுற்றுப்பயணமாக வாஷிங்கடன் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், "தயவுசெய்து, பிரதமர் சொன்னதை மிகவும் கூர்ந்து கவனிச்சு பாருங்க.. அதில், அதிபர் வேட்பாளராக டிரம்ப் இந்த வாசகத்தை ( "ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார் ") பயன்படுத்தினார் என்று தான் பிரதமர் கடந்த காலத்தைப் பற்றி கூறியிருந்தார்.

    பாகுபாடற்ற அணுகுமுறை

    பாகுபாடற்ற அணுகுமுறை

    எனவே நாங்கள் நேர்மையாக, சொன்னதை நீங்கள் இப்படி தவறாக புரிந்து கொள்வீர்கள் என நான் நினைக்கவில்லை, நீங்கள் யாருக்கும் ஒரு நல்ல சேவையைச் செய்கிறீர்கள் என்று நான் நினைக்கவில்லை. "ஆப் கி பார் டிரம்ப் சர்கார் என்று மோடி சொன்னதுடன் இந்த வாசகம் கூட இந்தியாவையும், வேட்பாளராக இருந்த அவரையும் இணைக்கிறது (கடந்த தேர்தலில் வேட்பாளர்) என்றும் கூறிருந்தார். எனவே பத்திரிகையாளர்கள் இந்த விஷயத்தில் துல்லியமாக செயல்படுங்கள். அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதை இந்தியா, மிகவும் பாகுபாடற்ற அணுகுமுறை என்றே கருதுகிறது" இவ்வாறு கூறினார்.

    English summary
    Don't misinterpret"; S Jaishankar Rejects " ab ki baar Trump Sarkar" Row. pm modi said on September 22. "Friends, we in India have connected well with President Trump, the words of candidate Trump. Ab ki baar Trump sarkar rang loud and clear".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X