டிரம்பின் குடுமி இந்திய வம்சாவளி கையில்.. நாடு கடத்தும் வழக்கில் ஆஜராகும் அபிஷேக் காம்ப்ளி.. யார் இவர்?
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினரை நாடு கடத்த நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. ஆனாலும் டொனால்ட் டிரம்ப் 100க்கும் அதிகமானவர்களை நாடு கடத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கில் ஆஜராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஷேக் காம்ப்ளியை டொனால்ட் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர் அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதே அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை அவர் கை, கால்களில் விலங்கு போட்டு அமெரிக்கா போர் விமானத்தில் நாடு கடத்த தொடங்கினர்.

இதில் இந்தியர்கள் 300க்கும் அதிகமானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த நாடு கடத்தும் நடவடிக்கைக்காக டொனால்ட் டிரம்ப் தி எலியன் எதிரி சட்டம் 1789 (Alien Enemies Act 1798) என்பதை பயன்படுத்தி வருகிறார். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை என்பதை விதித்துள்ளது. இந்த தடை இருக்கும்போதும் 100க்கும் அதிகமானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தடையை நீக்க கோரும் வழக்கில் டொனால்ட் டிரம்ப் தனக்கு ஆதரவாக வாதாட இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளார். அவரது பெயர் அபிஷேக் காம்ப்ளி. இவர் அமெரிக்க நீதித்துறையில் பணியாற்றி வருகிறார். Deputy Associate Attorney General பொறுப்பில் அவர் உள்ளார்.
இந்த அபிஷேக் காம்ப்ளி இந்தியாவில் பிறந்தவர். இவர் தனது 3 வயது நிரம்பிய நிலையில் குடும்பத்தினர் அமெரிக்கா சென்றனர். அமெரிக்காவின் கனெக்டிகட்டின் நார்வாக் பகுதியில் அபிஷேக் காம்ப்ளி தனது குழந்தை பருவத்தை கழித்தார். 2006ல் யூனிவர்சிட்டி ஆஃப் தி ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் Fine Arts படிப்பை முடித்தார்.
அதன்பிறகு என்டர்டெயின்மென்ட் இன்டஸ்ட்ரியில் சில காலம் அவர் பணியாற்றினார். அதன்பிறகு அவர் தனது துறையை மாற்றினார். நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றார். 2013ம் ஆண்டில் டைஸ் விமான தளத்தில் (Dyess Air Force) முதன்மை வழக்கறிஞராக செயல்பட்டார். சட்டங்கள் தொடர்பான நடவடிக்கையின் மேற்பார்வையாளராகவும் இருந்தார். 2014ல் டைஸ் விமான தள வழக்கறிஞர்களில் சிறந்தவர் என்ற பெயரை பெற்றார். அதே ஆண்டு பாதுகாப்பு ஆலோசகராக பதவி உதவி பெற்றார். டைஸ் விமான தளத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிக விமானப்படை வீரர்களுக்கு தேவையான சர்வீஸ்களை வழங்கும் வகையில் உயர்ந்தார்.
இவர் பொறுப்பில் இருந்தபோது தான் 9/11 தாக்குதலுக்கு நிதி உதவி செய்த அல்குவைதா பயங்கரவாதி முஸ்தபா அல் ஹவ்சாவி குவாண்டனாமோ விரிகுடாவில் வைத்து விமானப்படை பிடித்தது. அதன்பிறகு 2023 அக்டோபரில் அபிஷேக் காம்ப்ளி கன்சாஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் துணை அட்டர்னி ஜெனரலாகவும், சிறப்பு வழக்கு வழக்கறிஞராகவும், அரசியலமைப்பு சார்ந்த சிக்கல்களை தீர்க்கும் பிரிவின் தலைவராகவும் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications