இஸ்ரேலிடம் அடிமையான டொனால்ட் டிரம்ப்.. எப்ஸ்ட்டீன் பைல்ஸ் உடைத்த ரகசியம்.. காரணம் இதுதானம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகையே மிரட்டி வருகிறார். வரி விதிப்பது, குண்டு வீசுவது என்று அடாவடியில் ஈடுபட்டு வரும் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலிடம் மட்டும் அடிமை போல் பணிந்து நடந்து கொண்டதாக புதிதாக வெளியாகி உள்ள எப்ஸ்டீன் பைல்ஸில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவையே கதிகலங்க வைத்து வருகிறது இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு. இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் வங்கிகளில் கடன் வாங்கி அரசியல்வாதிகள், தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வந்தார்.
இதனால் அமெரிக்காவின் பிரபல அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள் வரை பலருடன் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு நல்ல உறவு இருந்தது. தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜெஃப்ரி எப்ஸ்டீனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன்
இந்நிலையில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. அவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து பல பிரபலங்களுடன் உல்லாசம் அனுபவிக்க வைத்ததாக கூறப்படுகிறது. டிரம்ப் உள்பட அமெரிக்காவின் முக்கிய புள்ளிகள் பலரும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் இளம்பெண்களுடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்கள் கூட வெளியாகின.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள சிறையில் எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டாலும் கூட பல சந்தேகங்கள் எழுந்தன. இவர் வெளியில் வந்தால் பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடும் என கருதிய பெரும் புள்ளிகள், அவரை சிறையில் வைத்தே அவரை தீர்த்து கட்டியதாகவும் கூறப்படுகிறது.
எப்ஸ்டீன் ஆவணங்கள்
ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஜெஃப்ரி பைல்ஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆவணங்கள் அமெரிக்க நீதித்துறையவில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 30 லட்சத்து்கும் அதிகமான பக்க ஆவணங்கள், சுமார் 2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இந்த எப்ஸ்டீன் பைல்ஸில் டொனால்ட் டிரம்ப் குறித்த சில முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. டொனால்ட் டிரம்பும், ஜெஃப்ரி எப்ஸ்டீனும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். இந்நிலையில் தான் எப்ஸ்டீன், டொனால்ட் டிரம்ப் குறித்த பல்வேறு ரகசியங்களை இ-மெயிலில் சேமித்து வைத்துள்ளார். அது ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
இஸ்ரேல் சொல்படி டிரம்ப்
அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள எப்ஸ்டீன் பைல்ஸில் டொனால்ட டிரம்ப் அமெரிக்க அதிபராக முதல் முறையாக செயல்பட்டபோது இஸ்ரேலால் நேரடியாக கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் சொல்வதை கேட்டு அந்த நாட்டுக்கு பணிந்து நடநதுள்ளார். இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாட் உடன் அவர் நெருக்கமாக செயல்பட்டு வந்தார்.
டிரம்ப் முதல் முறையாக அமெரிக்கா அதிபராக இருந்தபோது அவரது மருமகன் ஜாரெட் குஷ்னரின் தலையீடு அரசு நிர்வாகத்தில் அதிகமாக இருந்தது. அதோடு மருமகன் ஜாரெட் குஷ்னர் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்ட்டார். நிதி மோசடி வழக்குகளில் தண்டன பெற்ற ஜாரெட் குஷ்னரின் தந்தைக்கு டொனால்ட் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கினார்'' என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மொசாட் உளவாளி?
இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் கூட இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறையின் உளவு முகவர் தான் என்று அவ்வப்போது நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல், அமெரிக்காவை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரபலங்களை இளம்பெண்களுடன் நெருக்கமாக பழக வைக்க ஜெஃப்ரி எப்ஸ்டீன் போன்றவர்களை பயன்படுத்தி இருக்கலாம் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த குற்றச்சாட்டு குற்றச்சாட்டுகளாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications