ஐடி ஊழியர்களுக்கு செக்.. H 1B விசாவில் கைவைத்த டிரம்ப்.. பலவீனமான தலைவரா மோடி? ராகுல் விமர்சனம்
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச் 1 பி விசா ரூல்ஸை மாற்றி உள்ளார். அதற்கான கட்டணத்தை ரூ.1 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை இருந்த நிலையில் தற்போது அதனை ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். எச் 1 பி விசா திட்டத்தில் பயனடையும் மொத்த நபர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் என்ற நிலையில் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா திட்டத்தால் இந்தியர்கள் அதிகம் பயன்பெற்று வருகின்றனர். இந்த எச் 1 பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ) உயர்த்தும் உத்தரவில் அதிபர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இதற்கு முன்பு எச்1பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சமாக இருந்த நிலையில், அது இப்போது ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். அமெரிக்கா சென்று பணியாற்றுவதற்கான வாய்ப்பு இந்தியர்களுக்கு குறைய உள்ளது
2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட எச்1பி விசாக்களில் 71 சதவீதம் அளவுக்கு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வழங்கும் எச்1பி விசாக்களில் 5-ல் ஒரு பங்கை இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன.
இந்த விசாவின் காலஅவகாசம் 3 ஆண்டுகள். இந்த விசா வைத்திருப்பதன் மூலமாக ஒருவர் 3 ஆண்டு வரை அமெரிக்காவில் பணி செய்யலாம். அதன்பிறகு 3 ஆண்டுகள் வரை நீட்டித்து கொள்ள முடியும். அமெரிக்காவின் பணி அமெரிக்கர்களுக்கே.. இந்தியா உள்பட எந்த வெளிநாட்டினருக்கும் வழங்க கூடாது என்ற கொள்கை கொண்டவர் டிரம்ப். இதனால் இந்தியர்களை குறிவைத்து தான் டிரம்ப் இந்த கட்டண உயர்வை அறிவித்துள்ளார்.
இதனால் தற்போது எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இது தொழில் துறையினரை பாதித்துள்ள நிலையில் இப்போது டிரம்பின் இந்த திட்டம் நம் நாட்டின் ஐடி ஊழியர்களுக்கு பிரச்சனையாக உள்ளது.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி வலிமையில்லாத பிரதமர் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதாவது ஆங்கில ஊடகத்தில் 71 சதவீத எச் 1பி விசாவை இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது டிரம்ப் 90 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இது கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‛‛நான் மீண்டும் சொல்கிறேன். இந்தியா வலிமையற்ற பிரதமரை கொண்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.
மேலும் இ கடந்த 2017 ஜூன் 5ம் தேதியும் ராகுல் காந்தி , பிரதமர் மோடியை வலிமையற்ற தலைவர் என்று எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார். அப்போம் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தார். அப்போதும் அவர் எச் 1பி விசாவில் இந்தியர்களுக்கு செக் வைக்கும் வகையில் செயல்பட்டார். அந்த செய்தியை பகிர்ந்து ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். தற்போது அந்த பதிவையும் அவர் சுட்டிக்காட்டி ‛‛மீண்டும் சொல்கிறேன். இந்தியா வலிமையற்ற பிரதமரை கொண்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் இந்த விஷயம் தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛நரேந்திர மோடி அவர்கள.. உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய போன் காலுக்கு பிறகு இந்தியர்கள் வலியை அனுபவிக்க தொடங்கி உள்ளனர். எச் 1 பி விசாகவுக்கான ஆண்டு கட்டணம் ரூ.88 லட்சமாக நிர்ணயப்பட்டுள்ளது. இது இந்தியார்களை அதிகம் பாதிக்கிறது. அமெரிக்காவில் 70 சதவீத எச் 1 பி விசாவை பயன்படுத்தி வருவோர் இந்தியர்கள் தான்.
50 சதவீத வரி ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 துறைகளில் மட்டும் ரூ.2. 17 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் HIRE என்பது இந்தியர்களின் அவுட்சோர்ஜிங்கை குறிவைத்து கொண்டு வரப்படுகிறது. அதேபோல் சமீபத்தில் கூட இந்தியா - பாகிஸ்தான் போரை தலையீட்டு நிறுத்தியது நான் தான் என்று டிரம்ப் கூறி வருகிறார்.
இந்தியாவின் நலன்கள் தான் உயர்ந்ததாக இருக்க வேண்டும். மாறாக ஆரத்தழுவது, வெற்று முழக்கம், இசை நிகழ்ச்சி, பொதுமக்களை மோடி மோடி என கோஷமிட வைகப்பது வெளிநாட்டு கொள்கைகளுக்கு சரியாக இருக்காது. வெளியுறவு கொள்கை என்பது இந்தியாவின் நலன்களை பாதுகாப்பது. அதோடு இந்தியாவுக்கு தான் முன்னுரிமை கொடுத்து அறிவார்ந்த சமநிலையுடன் நட்பை வழிநடத்துவது தொடர்பானது'' என அறிவுரை வழங்கி விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications