Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டிரம்ப் தலைமையின் கீழ் பணியாற்ற தயார்!" அமெரிக்கா உதவியை நிறுத்திய பிறகு டோனை மாற்றிய ஜெலன்ஸ்கி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டிரம்ப் உடனான மோதலுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசமாக வெளியேறியிருந்தார். இதற்கிடையே இப்போது அவர் மொத்தமாகத் தனது டோனை மாற்றிக் கொண்டு டிரம்பை வலிமையான தலைவர் என்றும் அவருக்குக் கீழ் பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் கூறியிருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதல் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. பைடன் இருந்த வரை அமெரிக்க ஆயுதங்கள் உக்ரைனுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது.

Donald Trump is Strong Leader amp amp ready to work with him says Zelenskyy after US pauses aid to Ukraine

மோதல்

அப்போதும் போர் நிறுத்தம் குறித்து முயற்சி எடுக்கப்பட்ட போதிலும், டிரம்ப் வருகைக்கு பிறகே அது தீவிரமானது. முதற்கட்டமாக இது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாகவே முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் வைத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், ஜெலன்ஸ்கி ஆவேசமாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார்.

டோனை மாற்றிய ஜெலன்ஸ்கி

இதற்கிடையே பேச்சுவார்த்தைக்குத் திரும்பும் வரை உக்ரைனுக்கு போகும் அனைத்து உதவிகளையும் நிறுத்த டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், ஜெலன்ஸ்கி இப்போது திடீரென தனது டோனை மாற்றியிருக்கிறார். நாட்டில் மீண்டும் அமைதியைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வலுவான தலைமையின் கீழ் பணியாற்றத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மேலும், விரைவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அவர் மேலும், "நாங்கள் யாருமே தொடர்ந்து கொண்டே இருக்கும் இந்த போரை விரும்பவில்லை. உக்ரைன் விரைவில் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக உள்ளது. இங்கு உக்ரைன் மக்களை விட வேறு யாரும் அமைதியை விரும்பவில்லை. உக்ரைனில் மீண்டும் அமைதியைக் கொண்டு வர அதிபர் டிரம்பின் வலுவான தலைமையின் கீழ் பணியாற்ற நானும் எனது குழுவும் தயாராக இருக்கிறோம்.

போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் தயார்

போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் விரைவாகச் செயல்படத் தயார். முதற்கட்டமாகக் கைதிகளை விடுவிப்பது, விமானத் தாக்குதல்களை நிறுத்துவது, ஏவுகணைகள், நீண்ட தூர டிரோன்களை பயன்படுத்தத் தடை, எரிசக்தி மற்றும் சிவிலியன் கட்டிடங்கள் மீதான தாக்குதல், கடல் ரீதியான தாக்குதல் ஆகியவற்றை நிறுத்த நாங்கள் தயார். ரஷ்யாவும் இதை ஒப்புக்கொண்டால் உடனே கூட போர் நிறுத்தம் செய்யலாம். தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களிலும் வேகமான முடிவுகள் தேவை. அமெரிக்காவுடன் இணைந்து ஒரு சரியான தீர்வை கண்டறிய நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்றார்.

வெள்ளை மாளிகையில் டிரம்ப் உடன் நடந்த மீட்டிங் குறித்து ஜெலன்ஸ்கி, "வெள்ளை மாளிகையில் நடந்த எங்கள் சந்திப்பு, திட்டமிட்டபடி நடக்கவில்லை. இது சரியாக நடக்காமல் போனது வருத்தமளிக்கிறது. இப்போது செய்ய வேண்டிய விஷயங்களை நாம் சரியாகச் செய்ய வேண்டிய நேரம். வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார்.

அமெரிக்கா உடனான ஒப்பந்தம்

போர் நிறுத்த திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனில் உள்ள இயற்கை வளங்களை அமெரிக்கா பயன்படுத்தும் வகையிலான ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட இருந்தனர். அதற்குப் பதிலாக உக்ரைனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இரு தலைவர்களுக்கும் இடையே வெடித்த மோதலை தொடர்ந்து ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை.

இது குறித்து ஜெலன்ஸ்கி கூறினார், "உக்ரைன் எந்த நேரத்திலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக உள்ளது. உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்யும் ஒரு படியாகவே நாங்கள் அதைப் பார்க்கிறோம். அது எங்களுக்கு பலன் தரும் என நம்புகிறோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+