"ஈரான் போர் சீக்கிரமே முடிந்துவிடும்.." டிரம்ப் சொன்ன வார்த்தை.. ஆனால் அடுத்த வரியிலேயே ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் மோதல் தொடரும் சூழலில், இது சர்வதேச அளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், ஈரான் போர் மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் எனச் சொல்லி டிரம்ப் நம்பிக்கை அளித்துள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் 2வது வாரமாகத் தொடர்கிறது. இதற்கிடையே ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Donald Trump on Middle east tension Iran War to End Very Soon as Oil Prices Surge to new high

அதாவது இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதே அமெரிக்காவே தீர்மானிக்கும் என்றும் ஈரான் இதைத் தீர்மானிக்காது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், போர் காரணமாகக் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்திற்குப் போய் உள்ளது. மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் எனச் சொல்லியுள்ள டிரம்ப், கச்சா எண்ணெய் விலையும் சீக்கிரமே குறையும் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக டிரம்ப், ஈரான் மோதல் 4 வாரங்கள் தொடரும் எனக் கூறியிருந்தார். அவரது அந்த கருத்துக்கு பிறகே கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர ஆரம்பித்தது. இந்தச் சூழலில் தான் டிரம்ப் இதுபோல சீக்கிரமே முடிவுக்கு வரும் எனக் கூறியிருக்கிறார்.

அதேநேரம் டிரம்ப் அடுத்த வரியே எதிரிகளை முழுமையாக அழிக்கும் வரை அமெரிக்கப் படைகள் திரும்பாது என்றும் உறுதிப்படத் தெரிவித்தார். முதல் வரியில் போர் முடியும் எனச் சொல்லிவிட்டு, அடுத்த வரியை இப்படி அவர் சொல்லியுள்ளது குழப்பமான சூழலையே உருவாக்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+