மாத்தி மாத்திப் பேசும் ட்ரம்ப்... அடுத்தாண்டுதான் கொரோனா தடுப்பூசி கிடைக்குமாம்!!
வாஷிங்டன்: நவம்பர் மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி அமெரிக்கர்களுக்கு கிடைத்துவிடும் என்று கூறியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்போது அடுத்த ஆண்டுதான் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய ட்ரம்ப், '' "தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியவுடன், மக்களுக்கு அரசு நிர்வாகம் கொரோனா தடுப்பு ஊசியை பயன்படுத்தும். இதையடுத்து, ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான மருந்துகள் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் போதுமான தடுப்பூசிகள் கிடைக்கும்.

அமெரிக்காவில் தடுப்பு மருந்து தயாரிப்பில் பலர் ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவுடன் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் சுமார் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சம் பேர் வரை பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்தது இந்தியா இருந்து வருகிறது. பிரேசில் மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது. ஆனால், இன்னும் நம்பிக்கை அளிக்கும் வகையில் எந்த தடுப்பூசியும் வெளியாகவில்லை. ரஷ்யா தயாரித்து இருக்கும் தடுப்பூசியான ஸ்புட்னிக் வி விரைவில் சந்தைக்கு வரும் என்று நம்பிக்கை அளித்து இருந்தபோதும், இந்த மருந்து போட்டுக் கொண்டவர்களில் ஏழு பேரில் ஒருவருக்கு பக்க விளைவுகள் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
இருந்தபோதும், இந்தியாவில் இந்த மருந்தை தயாரிக்க டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனத்துக்கு தயாரிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இந்த தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளவும் டாக்டர் ரெட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன.
-
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications