வரி விதிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப் வசூலித்த 11 லட்சம் கோடி.. அந்த பணம் இனி யாருக்கு கிடைக்கும்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்த பரஸ்பர அவசரகால வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பு ட்ரம்ப்பிற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், பரஸ்பர வரி விதிப்பு மூலம் டிரம்ப் வசூலித்த 133 பில்லியன் டாலர் என்ன ஆகும்? அது சம்பந்தட்டவர்களுக்கு திருப்பி அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டி, இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.

உலக நாடுகள் மீது பரஸ்பர வரி
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன் கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார். உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.இதில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், டிரம்ப் அமல்படுத்திய வரி விதிப்பு செல்லாது என்று தெரிவித்தனர். 6 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க பாராளுமன்றத்துக்குத்தான் அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வழங்கியுள்ளது.
டிரம்ப்பின் வரி விதிப்பு ரத்து
அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவர்கள் அந்த அதிகாரத்தை அரசு நிர்வாகத்துக்கு அளிக்கவில்லை. எனவே டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என்று அறிவித்தனர். 3 நீதிபதிகள் டிரம்ப்பின் வரி விதிப்புகள் சட்டபூர்வமானவைதான் என்று தெரிவித்தனர். பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி, டிரம்ப்பின் வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் டிரம்ப் கடும் அப்செட் ஆனார். இந்த தீர்ப்பால் ஏற்பட்டுள்ள பின்னடைவை சமாளிக்க உலகளாவிய 10 சதவீத வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டம் 122-ன் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
$9 பில்லியன் வரித் தொகை
இது ஒருபக்கம் இருக்க பரஸ்பர வரி விதிப்பு மூலம் டிரம்ப் வசூலித்த 133 பில்லியன் டாலர் என்ன ஆகும்? அது சம்பந்தட்டவர்களுக்கு திருப்பி அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ட்ரம்ப்பின் வரிகள் சட்டவிரோதம் என நீதிமன்றம் தீர்ப்பு வந்த உடன், இல்லினாய்ஸ் ஆளுநர் ஜே.பி. பிரிட்ஸ்கர் டிரம்பிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துளார்.
அதில், தனது மாகாணத்தில் உள்ள மக்களுக்காக சுமார் $9 பில்லியன் வரித் தொகை ரீஃபண்ட் ஆக தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை ஊடகங்களிடம் பிரிட்ஸ்கர் பகிர்ந்துள்ளார். "உங்கள் வரிகள் விவசாயிகளுக்குப் பேரழிவையும், நட்பு நாடுகளுக்குச் சீற்றத்தையும் ஏற்படுத்தி, அத்தியாவசியப் பொருட்கள் விலையை உயர்த்தியுள்ளன.
திரும்ப தர வேண்டும் என கோரிக்கை
இழப்பீடு வழங்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை தொடரும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்த கோரிக்கையில் இல்லினாய்ஸில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் $1,700 திரும்ப தர வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. இது கடந்த ஆண்டு சராசரி அமெரிக்கக் குடும்பம் செலுத்திய தொகை மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்ஸ்கர் மட்டுமல்ல, நுகர்வோர் எதிர்கொண்ட சிரமங்களுக்குப் பலரும் பணம் திரும்பக் கோரியுள்ளனர். பல நிறுவனங்களும் இந்த வரிப் பணத்தைத் திரும்பப் பெறக் காத்துள்ளன. ஆனால், பணம் திரும்பப் பெறும் வழிமுறை சிக்கலாகவே அமையும் என்று அந்நாட்டு சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர். திரும்பப் பெறும் செயல்முறை எவ்வாறு செயல்படும் என்று தெளிவுபடுத்தப்படவில்லை.
அடுத்த 5 ஆண்டுகள் விசாரணை
உச்ச நீதிமன்றமும் இதுபற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெஸ்ஸண்ட் சந்தோகம் கூறியுள்ளார். சாதாரண அமெரிக்கர்களுக்கு நேரடி இழப்பீடு கிடைப்பது கடினம் என்றும் இந்தப் பணம் பெரும்பாலும் நிறுவனங்களுக்கே திரும்பச் செல்லும் எனவும் கூறினார்.
பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறைக்கு பல ஆண்டுகள் ஆகும் என ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
இருளில் மூழ்கும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியால் 48 மணிநேர கெடுவுடன் டிரம்ப் மிரட்டல்! ஷாக் அறிவிப்பு -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
ஹார்முஸ் ஜலசந்திக்கு பாதுகாப்பு அளிக்க தயார்.. ஒன்று கூடிய 20 நாடுகள்! ஈரானுக்கு எகிறும் பிரஷர் -
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்! -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
"கோழைகள்.." கண்கள் சிவந்த டிரம்ப்.. நேட்டோவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா? சரமாரி பாய்ச்சல் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications