டிரம்புடன் நேர்காணல்.. எக்ஸ் தளத்தில் தொழில்நுட்ப கோளாறு! சைபர் அட்டாக் என எலான் மஸ்க் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்டு டிரம்பை எலான் மஸ்க் பேட்டி எடுத்து வருகிறார். எக்ஸ் - சமூக ஊடகத்தின் ஸ்பேஸில் இது ஒலிபரப்பு ஆகிவரும் நிலையில், நிகழ்ச்சி தொடங்கியதும் சைபர் தாக்குதல் நடந்து இருப்பதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்கள். முன்னதாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகிய நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் 78-வயதான டொனால்டு டிரம்பை ஆதரிப்பதாக உலக பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சி.இ.ஓவுமான எலான் மஸ்க் அறிவித்தார். டிரம்பிற்கு, 4.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பு படி ரூ.375.80 கோடி) தேர்தல் நிதியாக எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க் கொடுக்க இருப்பதாகவும் அறிவித்தார்.
இது மட்டும் இன்றி டிரம்பிற்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதாக கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் எலான் மஸ்க் குற்றம் சாட்டி அவ்வப்போது தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப்பை நேர்காணல் செய்ய இருப்பதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நேர்காணல் குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் கூறும் போது, "இது ஸ்கிரிப்ட் செய்யப்படாத உரையாடலாக இருக்கும்.
எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது. அதனால் நிச்சயம் இதில் பொழுதுபோக்கு அம்சத்துக்கு உத்தரவாதம் தர முடியும். யூசர்கள் தங்கள் கேள்விகளை பதிவு செய்யலாம். எக்ஸின் ஸ்பேசஸில் நேரலையில் இந்த உரையாடல் ஒலிபரப்பாகும்" என்று பதிவிட்டு இருந்தார்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இந்த உரையாடல் தொடங்கியது. இந்த உரையாடல் தொடங்கியதும் மிகப்பெரிய தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. யூசர்கள் இந்த பேட்டி ஒலிபரப்பு ஆகும் ஸ்பேசில் இணையமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சைபர் அட்டாக் போல தெரிவதாக எலான்மஸ்க் குற்றம் சாட்டினார். space did not exist- என்ற எரர் மேசேஜ் பயனர்கள் பலருக்கும் வந்தது.
2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஸ்பேசில் இணைந்து இருப்பதாக காட்டினாலும் யாருமே பேசுவது தெரியவில்லை. இதையடுத்து DDOS அட்டாக் போல இருப்பதாகவும் குறைவான யூசர்களை கொண்டு ஸ்பேஸ் நடைபெறும். உரையாடல்கள் பிறகு பதிவு செய்யப்படும்" என்று எலான் மஸ்க் கூறினார். தற்போது இந்த உரையாடல் ஸ்பேசில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications